/* */

பவானியில், மண்பாண்டத் தொழிலாளர்கள் (குலாலர்) சங்க முப்பெரும் விழா

Erode news- தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் (குலாலர்) சங்க முப்பெரும் விழா பவானியில் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) நடைபெற்றது.

HIGHLIGHTS

பவானியில், மண்பாண்டத் தொழிலாளர்கள் (குலாலர்) சங்க முப்பெரும் விழா
X

Erode news- முப்பெரும் விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Erode news, Erode news today- தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் (குலாலர்) சங்க முப்பெரும் விழா பவானியில் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) நடைபெற்றது.

தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் (குலாலர்) சங்க 34ம் ஆண்டு மாணவ - மாணவியர்களுக்கு கல்வி பரிசளிப்பு விழா, 50வது ஆண்டு மாநில சங்கம் பொன்விழா மற்றும் இளைஞரணி துவக்க விழா என முப்பெரும் விழா பவானி அருகே உள்ள குப்பிச்சிபாளையத்தில் நடைபெற்றது. விழாவிற்கு, அறக்கட்டளை தலைவர் எஸ்.பி.நடராஜன் தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட தலைவர் எஸ்.கனகராஜ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் வி.ராஜ்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். இதில், மாநில பொதுச் செயலாளர் பாவலர் மா.கணபதி, மாநில பொருளாளர் மகேஷ் கண்ணன், மாநில இளைஞரணி தலைவர் எஸ்.என்.பழனி, மாநில துணைப் பொதுச் செயலாளர் மா.அன்பரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் மாநிலத் தலைவர் டாக்டர் சேம.நாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார். மழைக்காலத்தில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக பொம்மை செய்யும் தொழிலாளர்களுக்கு மேலும் கூடுதலாக ரூபாய் 5000 வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, மண்பாண்ட நலவாரிய தலைவர் மற்றும் உறுப்பினர் குழு அமைக்க முதல்வருக்கு கோரிக்கை விடுப்பது , தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி பருப்பு சர்க்கரை வழங்குவது போல் மண் பானையும், மண் அடுப்பும் இலவசமாக வழங்க வேண்டும்.

மண்பாண்ட தொழிலாளர்களை மேம்படுத்தவும் நவீனப்படுத்தவும், இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி கல்லூரி நமது மாவட்டத்தில் அமைக்க வேண்டும், தமிழக அரசு பாட புத்தகத்தில் களிமண்ணால் செய்யப்பட்ட மண்பாண்டங்களில் பயன்களை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஒரு பிரிவினை சேர்க்க வேண்டுவது, குலாலர்சமுதாய மக்களுக்கு ஐந்து சதவீத இட ஒதுக்கீடு அளிக்க அரசை வேண்டுவது மாவீரர் சாலிவாகனன் நினைவாக ஒரு மணி மண்டபமும் திருவுருவச் சிலையும் அமைத்து தர அரசை வேண்டுவது ,தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் நலவாரியத்தில் இதுநாள் வரை பதிவு செய்திட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் மின்சாரத்தால் இயங்கக்கூடிய (சீலாவீல்) சக்கரம் இலவசமாக வழங்க தமிழக அரசு வேண்டுவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் விழாவில் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தின் முடிவில் மாவட்ட பொருளாளர் வீ.டி யுவராஜ் நன்றி கூறினார்

Updated On: 2 Oct 2023 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்