/* */

ஈரோடு கருங்கல்பாளையத்தில் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாட்டம்

தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டுக் கலை விழாவாக ஈரோடு கருங்கல்பாளையத்தில் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

ஈரோடு கருங்கல்பாளையத்தில் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாட்டம்
X

தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டுக் கலை விழாவாக ஈரோடு கருங்கல்பாளையத்தில் பொங்கல் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டுக் கலை விழாவாக ஈரோடு கருங்கல்பாளையத்தில் பொங்கல் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஐந்து வகை நிலம் சார்ந்த பொங்கல் கலை விழாவில் தப்பாட்டம், சாட்டை குச்சி ஆட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட மண்சார்ந்த கலைகளுடன் மிகுந்த உற்சாகத்துடன் பொங்கல் விழா களை கட்டியுள்ளது.

ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள கலைத்தாய் அறக்கட்டளை, ஆண்டுதோறும் பொங்கல் திருநாளன்று இவ்வமைப்பு முன்னெடுக்கும் தமிழர் பண்பாட்டுக் கலை விழாவில் ஐந்திணைகளுக்கும் ஐந்து பொங்கல் வைத்து அந்நிலங்களுக்கான கலைகள் அரங்கேற்றப்படுகின்றன.

பள்ளி, கல்லூரி மாணவர்களால் நிகழ்த்தப்படும் இந்நாட்டுப்புறக் கலைகளில் கிராமிய மணம் கமழும். பாரம்பரிய உடையணிந்து மாணவர்களும், மாணவிகளும் ஒருமித்த அசைவுகளில் நளினத்தை வெளிப்படுத்தி ஆடுவது பொங்கல் ருசி. நமது நாட்டுப்புறக் கலைகளுக்குள் நமது தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியல் முறைகள் பதிவாகியிருக்கின்றன என்றும், அதனை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்வதன் மூலம் வளமான சமூகத்தை உருவாக்க இயலும் என்கின்றனர் கலைத்தாய் பிள்ளைகள்.

தமிழர் பண்பாட்டுக் கலை விழாவின் நோக்கம் நாட்டுப்புறக் கலைகளின் வழியே தமிழர் பண்பாடு மற்றும் வாழ்வியலை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதும், அதன் நெறிகளைப் புகட்டுவதும்தான். பொங்கல் என்பது நமது தமிழ்ச் சமூகத்துக்கான பண்டிகை என்பதால், இந்நன்நாளில் தமிழ் கலைகளை அரங்கேற்றுகிறோம். நிலங்களின் தன்மையை அடிப்படையாக வைத்து அதனை ஐந்திணைகளாகப் பிரித்திருக்கிறோம்.

Updated On: 14 Jan 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்