/* */

சென்னிமலையில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க கூண்டு அமைப்பு

சென்னிமலை நகர பகுதியில் உள்ள அனைத்து குரங்குகளையும் வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்.

HIGHLIGHTS

சென்னிமலையில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க கூண்டு அமைப்பு
X

பைல் படம்

சென்னிமலை வனப்பகுதியில் இருந்த குரங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி சென்னிமலை நகர பகுதிக்கு வந்துவிட்டன. இதனால், சென்னிமலை நகரில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னிமலை குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக குரங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. வீடுகளுக்குள் புகும் குரங்குகள் உணவுப் பொருட்களை தூக்கி செல்கின்றன. தென்னை, மாதுளை, கொய்யா போன்ற மரங்களில் ஏறி, காய்களை பறித்து சேதப்படுத்துகின்றன வீட்டு மொட்டை மாடிகளில் காய வைத்திருக்கும் உணவு பொருட்களை எடுத்து தின்பது, குழந்தைகள் மற்றும் பெண்களை அச்சுறுத்துவது. கடைகளில் உள்ள பொருட்களை நாசப்படுத்துவது. கேபிள் ஒயர்களை அறுப்பது என நாளுக்கு நாள் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்தது.

இதனால் சென்னிமலையில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை வனத் துறையினர் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு கடை உரிமையாளர்கள் ஈரோடு வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

மேலும் இதுகுறித்த. ஈரோடு வனச்சரகர் உத்தரவின் பேரில் வனத்துறை ஊழியர்கள் நேற்று சென்னிமலையில் குரங்குகளை பிடிக்க பல்வேறு இடங்களில் கூண்டுகள் அமைத்தார்கள். கூண்டில் குரங்குகளுக்கு பிடித்தமான பழ வகைகள் வைக்கப்பட்டு இருந்தன. அதை தின்பதற்காக கூண்டுக்குள் நுழைந்த 7 குரங்குகள் கூண்டில் சிக்கிக் கொண்டன. அவற்றை வனப் பகுதியில் விடுவதற்காக வனத் துறையினர் கொண்டு சென்றார்கள். இது பற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், சென்னிமலை நகர பகுதியில் உள்ள அனைத்து குரங்குகளையும் வனத் துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும். இல்லை என்றால் மீண்டும் அட்டகாசம் செய்ய தொடங்கிவிடும் என்றார்கள்.

Updated On: 19 March 2023 9:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?