/* */

சென்னிமலை முருகன் கோயிலில் மார்கழி மாத விழா நிறைவு..

Sennimalai Murugan Kovil-மார்கழிமாதம் முழுவதும் மார்கழி மாத விழா குழுவினர் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்..

HIGHLIGHTS

Sennimalai Murugan Kovil
X

Sennimalai Murugan Kovil

Sennimalai Murugan Kovil-பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோயில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,749 அடி உயரத்தில் பசுமை மிக்க மரங்களாலும், மூலிகை குணம் கொண்ட செடிகளாலும் சூழப்பட்ட அழகிய வனப்பகுதியில் சென்னிமலை கோயில் உள்ளது..

இத்தல இறைவனை தண்டாயுதபாணி என்றும் அழைப்பார்கள். இங்கு இறைவன் அக்னி மூர்த்தியாக (இரண்டு தலைகளைக் கொண்ட முருகப்பெருமான்) திருக்காட்சியளிக்கிறார். இந்த ஆலயம் கந்தசஷ்டி கவச பாடல் அரங்கேற்றம் செய்யப்பட்ட தலமாகும்.வள்ளி-தெய்வானை இருவரும், முருகப்பெருமானை திருமணம் செய்வதற்காக, அமிர்தவல்லி-சுந்தரவல்லி என்ற பெயரில் தவம் செய்த சிறப்புமிக்க ஆலயம்.இங்கு முருகப்பெருமானுக்கு பால், தயிர் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் செய்யப்படும் தயிர், புளிப்பதில்லை என்பதே இந்த ஆலயத்தின் அதிசய நிகழ்வாகும்.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வறட்சியான கோடை காலத்தில் சிறிதேனும்கூட மழையில்லாத கொடூரமான நேரத்தில் மலைக் கோயிலுக்கு தென்புறம் அமைந்துள்ள தீர்த்த விநாயகர் முன்பு திடீரென பொங்கி வழிந்தோடும் மாமாங்கத் தீர்த்தமானது அதிசயம் நிறைந்த தெய்வீகச் சிறப்பாக அமைகிறது.

சென்னிமலை முருகன் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழிமாதம் முழுவதும் மார்கழி மாத விழா குழுவினர் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடையால் மார்கழி மாத சிறப்பு வழிபாடு நடைபெறவில்லை. இந்த ஆண்டு மார்கழி மாத சிறப்பு வழிபாடு கடந்த மார்ச் 1ம் தேதி துவங்கியது. அன்று முதல் தினமும் காலை 5.30 மணிக்கு கோமாதா பூஜையுடன் நிகழ்ச்சிகள் துவங்கி பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. மார்கழி மாத நிறைவு விழாவை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை நடந்தது.

இதை முன்னிட்டு காலை 5.30 மணிக்கு முதல் கால பூஜையாக கோமாதா பூஜை நடந்தது. பின்னர் பசுவிற்கு பூஜை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து விநாயகர் வழிபாடு, கலச பூஜை, 108 சங்கு பூஜை, சாமி புறப்பாடு நடந்தது. மேலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 5 April 2024 6:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!