கொடிவேரி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

கொடிவேரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் குடிநீர் சுத்திகரிப்பு நிலையப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கொடிவேரி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு
X

கொடிவேரி அணையில் ஆய்வு மேற்கொள்ளும் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி

பெருந்துறை அருகே உள்ள திங்களூர் கருக்குப்பாளையம் பிரிவில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தமிழ்நாடுகுடிநீர் வடிகால் வாரியம் மூலம் கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள், கொடிவேரி தலைமை நீருந்து நிலையம் மற்றும் தடுப்பணை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, பெருந்துறை பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேல்நிலை தொட்டி வளாகத்தில் ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பெருந்துறை மற்றும் 7 பேரூராட்சிகள், 547 வழியோர ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.227 கோடி மதிப்பீட்டில் கொடிவேரி கூட்டுக் குடிநீர்திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த திட்டத்தின் மூலமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 28 கிராம ஊராட்சிகள், பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், காஞ்சிகோவில், நல்லாம்பட்டி, பள்ளபாளையம் மற்றும் பெத்தாம்பாளையம் பேரூராட்சிகள், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 4 கிராம ஊராட்சிகள் (27 குடியிருப்புகள்) மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 37 ஊராட்சிகள் (283 குடியிருப்புகள்) மற்றும் ஊத்துக்குளி, குன்னத்தூர் பேரூராட்சிகள் பயன்பெறும்.

தற்போது தனிநபருக்கு நாளொன்றுக்கு ஊரகப் பகுதிகளில் 25 முதல் 45 லிட்டர் வீதமும் பேரூராட்சி பகுதிகளில் 60 லிட்டர் வீதமும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ஊரகப் பகுதிகளுக்கு 55 லிட்டர் வீதமும் பேரூராட்சி பகுதிகளுக்கு 90 லிட்டர் வீதமும் வழங்கவேண்டும். மக்கள் தொகைபெருக்கம் மற்றும் குடிநீர் தேவைக்கேற்ப இப்புதிய கூட்டுகுடிநீர்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக தனிநபருக்கு நாளொன்றுக்கு ஊரகப் பகுதிகளில் 55 லிட்டர் வீதமும், பேரூராட்சி பகுதிகளில் 135 லிட்டர் வீதமும் குடிநீர் வழங்கப்பட உள்ளது என கூறினார்.

Updated On: 26 Nov 2021 4:15 AM GMT

Related News