/* */

ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்த குன்றி மலைவாழ் மக்கள்

Erode news, Erode news today - ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள குன்றி மலைக்கிராமத்திற்கு வழங்கப்பட்ட ஆம்புலன்ஸை மலைவாழ் பெண்கள் ஆரத்தி எடுத்து, உற்சாக வரவேற்பு அளித்தனர்.

HIGHLIGHTS

ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்த குன்றி மலைவாழ் மக்கள்
X

Erode news, Erode news today- பாரம்பரிய முறைப்படி ஆம்புலன்ஸ் வாகனத்தை, வரவேற்ற குன்றி மலைவாழ் மக்கள்.

Erode news, Erode news today- சத்தியமங்கலம் அருகே உள்ள குன்றி மலைக்கிராமத்திற்கு வழங்கப்பட்ட இலவச ஆம்புலன்ஸை மலைவாழ் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகே உள்ள குன்றி மலைக்கிராமத்தில் கோவிலூர், கீலூர், இந்திராநகர், ரோலன்ஸ் நகர், பெரிய குன்றி, சின்ன குன்றி, புளியமரத்தொட்டி, குஜ்சம்பாளையம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன.

இந்த மலைக்கிராமங்களில் உள்ளவர்கள் அவசர மருத்துவ உதவிக்கு கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்ல வேண்டும். பிரசவத்துக்கு செல்பவர்கள் மற்றும் வன விலங்குகளால் தாக்கப்படுபவர்களை உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வாடகை வாகனங்களையே பயன்படுத்தி வந்தனர். இது அப்பகுதி மலைவாழ் மக்களிடையே பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியது.


இது குறித்து தன்னார்வலர்கள் காமெடி நடிகர் பாலா விடம் கூறினர். அவர் ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஆம்புலன்சை குன்றி மலை கிராம மக்களுக்கு வழங்கினார். அந்த ஆம்புலன்சை கிராம மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை (நேற்று) நடைபெற்றது.

அப்போது ஊருக்கு கொண்டு வரப்பட்ட ஆம்புலன்சை கிராமமக்கள் தங்களுடைய பாரம்பரிய முறைப்படி பீனாச்சி வாத்தியம் முழங்கியும், தாரை தப்பட்டை அடித்தும் நாடனமாடியும் வரவேற்றனர். மேலும், பெண்கள் ஆம்புலன்சுக்கு ஆரத்தி எடுத்தனர். இந்நிகழ்ச்சியில், உணர்வுகள் அமைப்பின் தலைவர் மக்கள்ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Aug 2023 5:15 AM GMT

Related News