/* */

அந்தியூர் பேரூராட்சி தலைவராக பாண்டியம்மாள் போட்டியின்றி தேர்வு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி தலைவராக பாண்டியம்மாள் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

அந்தியூர் பேரூராட்சி தலைவராக பாண்டியம்மாள் போட்டியின்றி தேர்வு
X

அந்தியூர் பேரூராட்சி தலைவராக பாண்டியம்மாள் தேர்ந்தெடுக்கப்பட்ட போது எடுத்த படம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு கடந்த 4ம் தேதி நடந்த மறைமுகத் தேர்தலுக்கு, வார்டு உறுப்பினர்கள் யாரும் வராததால் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் இன்று காலை அந்தியூர் பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் மறைமுக தேர்தல் நடைபெற்றது. திமுக தலைமை அறிவித்த பேரூராட்சி தலைவர் வேட்பாளர், 3-வது வார்டு உறுப்பினர் கீதா, 15வது வார்டு திமுக உறுப்பினர் பாண்டியம்மாள் உள்ளிட்ட 16 வார்டு உறுப்பினர் காலை 9 மணிக்கு கூட்ட அரங்கிற்கு வந்தனர்.

3-ஆவது வார்டு உறுப்பினர் கீதாவுக்கு, முன்மொழியவும் வழிமொழியும் யாரும் இல்லாததால் கூட்ட அரங்கை விட்டு வெளிநடப்பு செய்தார். இதையடுத்து மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பாண்டியம்மாள், போட்டியின்றி அந்தியூர் பேரூராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அலுவலர் உமா சங்கர், பாண்டியம்மாளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பேரூராட்சி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பாண்டியம்மாள் பேரூராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Updated On: 26 March 2022 5:00 AM GMT

Related News