/* */

ஈரோட்டில் 500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளநீர்

ஈரோட்டில் தொடர் கனமழை எதிரொலியால் 500-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

ஈரோட்டில் 500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளநீர்
X

ஈரோடு ரங்கம்பாளையம் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளநீர்.

ஈரோடு மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்றிரவு 9 மணி முதல் இன்று அதிகாலை 3 மணி வரை இடைவிடாமல் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தாழ்வான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.குறிப்பாக ஈரோடு ரங்கம்பாளையம் , மூலப்பாளையம் , சேனாதிபதிபாளையம், சாஸ்திரிநகர் , குறிஞ்சி நகர், எம்ஜிஆர் நகர், அன்னை சத்யா நகர், முத்தாம்பாளையம், செட்டிபாளையம், சடையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.


இதுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் அப்பகுதி பொதுமக்களை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர். தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி சிறு வணிகர்களின் கடைகளுக்கும் மழை வெள்ளநீரானது புகுந்ததால், பொருட்கள் சேதமடைந்து வியாபாரம் செய்ய முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனையோடு தெரிவித்தனர்.

மேலும், நேற்று இரவு ரங்கம்பாளையத்திலிருந்து முத்தாம்பாளையம் செல்லும் ரயில்வே நுழைவு சுரங்க பாதையில் மழை வெள்ளநீரில் கார் சிக்கியது. இதனால் காரில் பயணம் செய்த 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தற்போது, வெண்டிபாளையம் ரெயில்வே நுழைவு பாலத்தில் மழை வெள்ளநீர் தேங்கி நின்றதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.


மாவட்டத்தில் நேற்று காலை முதல் இன்று காலை வரை பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:-

ஈரோடு - 33.00 மி.மீ , பெருந்துறை - 51.00 மி.மீ , கோபி - 29.00 மி.மீ , தாளவாடி - 30.00 மி.மீ , சத்தி - 58.00 மி.மீ , பவானிசாகர் - 7.60 மி.மீ , பவானி - 15.60 மி.மீ , கொடுமுடி - 62.00 மி.மீ , நம்பியூர் - 64.00 மி.மீ , சென்னிமலை - 42.00 மி.மீ , மொடக்குறிச்சி - 26.00 மி.மீ , கவுந்தப்பாடி - 39.20 மி.மீ , எலந்தகுட்டைமேடு - 66.20 மி.மீ , அம்மாபேட்டை - 17.80 மி.மீ , கொடிவேரி - 45.00 மி.மீ , குண்டேரிப்பள்ளம் - 15.80 மி.மீ , வரட்டுப்பள்ளம் - 36.60 மி.மீ மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 638.8 மி.மீ ஆகவும், சராசரி மழைப்பொழிவு - 37.57 மி.மீ ஆகும்.

Updated On: 21 Oct 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  2. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  3. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  4. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  5. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  7. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  8. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  9. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  10. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?