/* */

மொடக்குறிச்சி அருகே அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்…

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

HIGHLIGHTS

மொடக்குறிச்சி அருகே அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்…
X

இந்திராகாந்திபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புஞ்சை காளமங்கலம் ஊராட்சி, இந்திராகாந்திபுரத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு அரசு சார்பில் 15 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால், சரண்யா, சரஸ்வதி, ஈஸ்வரி, அன்னக்கிளி, பழனியம்மாள், நித்யா ஆகிய 6 பேர்களுக்கு மட்டும் உரிய இடம் அளந்து கொடுக்கப்படவில்லை.

இதுதொடர்பாக, பல முறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட 6 பேரும் தங்களுக்கான இடத்தை அளந்து தருமாறு கூறி உள்ளனர். ஆனால், அளந்து கொடுக்கப்படாததால் 6 பேர் தரப்பிலும் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதுதொடர்பான வழக்கில் மூன்று முறை உரிய இடத்தை அளந்து கொடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும் இடம் அளந்து கொடுக்கப்படவில்லை. இதற்கிடையே, கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பட்டா தாரர்களுக்கு அளிக்கப்பட்ட உரிய இடத்தை அளந்து கொடுக்க வேண்டும் என வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதனை தொடர்ந்து இடத்தை அளந்து கொடுக்க கிராம நிர்வாக அலுவலர் சாம்சன் ஜார்ஜ், வருவாய் ஆய்வாளர் அமிர்தலிங்கம் மற்றும் உதவியாளர்களுடன் இந்திராகாந்திபுரம் சென்றனர். பின்னர் அங்குள்ள உள்ள இடத்தை அளவீடு செய்தனர்.

ஆனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்களுக்கு உரிய இடத்தை அளந்து தர வேண்டும் என்றும் மாற்று இடம் வழங்க அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.

இதனைத் தொடர்ந்து புஞ்சை காலமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் உதயசூரியன், துணைத் தலைவர் சரவணன் மற்றும் மலையம்பாளையம் காவல்துறையினர் பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். தொடர்ந்து உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்ட காவல் துறையினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

Updated On: 20 Dec 2022 7:34 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!