/* */

ஈரோட்டில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் இரு அமைச்சர்கள் பங்கேற்பு

ஈரோட்டில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் அமைச்சர்கள் முத்துசாமி, செஞ்சி மஸ்தான் பங்கேற்றனர்.

HIGHLIGHTS

ஈரோட்டில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில்   இரு அமைச்சர்கள் பங்கேற்பு
X
ஈரோட்டில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் அமைச்சர்கள் முத்துசாமி, செஞ்சி மஸ்தான் பங்கேற்றனர்.

சர்வதேச கிறிஸ்தவ ஊழியர் கூட்டமைப்பு மற்றும் ஈரோடு மாவட்ட அனைத்து திருச்சபைகளும் இணைந்து மாபெரும் கிறிஸ்மஸ் விழா ஈரோடு கொல்லம்பாளையம் நாடார்மேட்டில் உள்ள பெத்தானியா திருச்சபை தேவாலயத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு சர்வ தேச கிறிஸ்தவ ஊழியர்கள் கூட்டமைப்பின் தேசிய தலைவரும், ஈரோடு பெத்தானியா பெல்லோஷிப் லய பேராயர் ஜென்ஷன் ஜெபராஜ் தலைமை வகித்தார். பிஷப் டாக்டர் கே மேஷாக் ராஜா கிறிஸ்துமஸ் சிறப்புரையாற்றினார். தேசிய சட்டத்துறை செயலாளர் பால் விக்டர் பேரமைப்பு பற்றிய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி தமிழ்நாடு சிறு பான்மை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.மஸ் தான் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர். அமைச்சர்களிடம் சர்வதேச கிறிஸ்தவ ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

அம்மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

திருச்சபை கட்டுமான பணிகளுக்கு அனுமதி கோரி உள்ள சபைகளுக்கு அனுமதி வழங்கி பாதுகாப்பு வழங்கிட வேண்டும். மதத் தலைவர்கள் புனித தலமான ஜெருசலேம் சென்று வர தமிழக அரசு வழங்கி வரும் மானிய நிதியில் இருந்து மேலும் நிதியை உயர்த்தி வழங்க வேண்டும். கிறிஸ்துவ ஊழியர்களுக்கும் வழிபாட்டுத் தலங்களுக்கும் வருகின்ற அச்சுறுத்தலுக்கு நடவடிக்கை மேற்கொண்டு பாதுகாப்பு வழங்கிட வேண்டும். கிறிஸ்தவ கல்லறை இடங்களை பாதுகாத்திடவும் கல்லறை இல்லாத இடங்களில் தமிழக அரசு இடம் ஒதுக்கி கிறிஸ்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும். தமிழக அரசு சிறுபான்மை மாணவர்களுக்கு ஏற்கனவே வழங்கி இருக்கின்ற கல்வி உதவி தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும்.கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களுக்கு புனரமைப்பு நிதி அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகளுக்கும் சில விதிமுறைகளை தளர்த்தி வழங்கும் படி கேட் டுக்கொள்ளப்படுகிறது. சிறுபான்மையினர் நடத்தி வரும் பள்ளிகளில் மத்திய அரசு வழங்கி வரும் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், அத்தொகை மீண்டும் கிடைத்திட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த விழழவில் சிறப்பு விருந்தினர்களாக ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வே.ரா, ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், ஈரோடு மாநகர தி.மு.க. செயலாளர் சுப்ரமணியன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பிரகாஷ், தி.மு.க. பொருளாளர் பி.கே.பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக பர்ணபாஸ், பீட் டர், ஆபிரகாம், ஜீவானந்தம், மானசே. யுவராஜ், பெஞ்ச மின் ஜாஸ்வா ஸ்டீபன், ஜான் சன் சார்வஸ், எசேக்கியால், எட்வின் ராஜ், ஆரோக்கிய சாமி ஆபிரகாம், பிலிப், அன்புநாதன் டேவிட் ஆகியோர் நடந்து கொண்ட பிளவை கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஜென்ஷன் தலைமையில் டேவிட் குணா, ரமேஷ் டேனியல், சந்தோஷ்காந்தி, சுதாகர், ஈரோடு மாவட்ட பொறுப்பாளர்கள் பிரின்ஸ், ஜேம்ஸ், சரவணன் லாரன்ஸ், ஆகியோர் செய்து இருந்தனர். இந்த விழாவில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து திருச்சபை பேராயர்கள் மற்றும் உறுப்பினர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்.நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சுமார் 10 கிலோ எடை கொண்ட கிறிஸ்துமஸ் கேக்கினை அமைச்சர்கள் வெட்டி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

Updated On: 7 Dec 2022 8:36 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?