/* */

ஈரோட்டில் நடந்த பகுதி சபை கூட்டத்தில் பங்கேற்றார் அமைச்சர் முத்துசாமி

ஈரோடு எஸ்.எஸ்.பி. நகரில் நடந்த பகுதி சபை கூட்டத்தில் அமைச்சர் சு.முத்துசாமி பங்கேற்றார்.

HIGHLIGHTS

ஈரோட்டில் நடந்த பகுதி சபை கூட்டத்தில் பங்கேற்றார் அமைச்சர் முத்துசாமி
X

பகுதி சபை கூட்டத்தில் அமைச்சர் முத்துசாமி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

ஈரோடு எஸ்.எஸ்.பி.நகரில் நடந்த பகுதி சபை கூட்டத்தில் அமைச்சர் சு.முத்துசாமி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில், வார்டு கமிட்டி அமைத்து வார்டு வாரியாக பகுதி சபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி உள்ளாட்சி தினமான நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பகுதி சபை கூட்டங்களும், கிராமங்களில் கிராம சபை கூட்டங்களும் நடைபெற்றது.

பகுதி சபை கூட்டங்கள் நடைபெறுவதற்கு வசதியாக நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள வார்டுகள் தோறும், வார்டு கவுன்சிலர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டிருந்தது. ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பகுதி சபை கூட்டமானது 2வது மண்டலத்திற்குட்பட்ட 9வது வார்டு எஸ்.எஸ்.பி. நகரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

கூட்டத்தில் குடிநீர் விநியோகம், குடிநீர் குழாய் இணைப்பு, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக பொதுமக்கள் ஆர்வத்துடன் மனுக்களை வழங்கினர். இம்மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அமைச்சர் முத்துசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் முத்துசாமி கூறியது வருமாறு:-

நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சிகள் தினமாக கொண்டாட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இதன் ஒரு பகுதி யாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பகுதி சபை கூட்டங்கள் நடத்தி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டு பகுதிகளையும் ஒவ்வொரு வார்டையும் 4 பகுதிகளாக பிரித்து மொத்தம் 240 பகுதி சபை எல்லைகள் வரையறை செய்யப்பட்டுள்ளது. இதே போல நகராட்சி மற்றும் பேரூராட்சிகளும் பகுதி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக அரசின் உத்தரவுப்படி ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் என 600க்கும் மேற்பட்ட இடங்களில் பகுதி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

இதேபோல், உள்ளாட்சிகள் தினத்தை யொட்டி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. பவானி அடுத்துள்ள ஓடத்துறை கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கலந்து கொண்டு பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ளாட்சி தினத்தையொட்டி கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

Updated On: 3 Nov 2022 7:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  3. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  4. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  5. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  6. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  7. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  8. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  9. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  10. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!