/* */

அந்தியூரில் சிபிஎம் தலைவர் காளியண்ணன் நினைவு தினம் அனுசரிப்பு

அந்தியூர் அருகேயுள்ள கீழ்வாணியில், மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் காளியண்ணனின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

HIGHLIGHTS

அந்தியூரில் சிபிஎம் தலைவர் காளியண்ணன் நினைவு தினம் அனுசரிப்பு
X

அத்தாணி அருகேயுள்ள கீழ்வாணியில், சிபிஎம் முதுபெரும் தலைவர் காளியண்ணனின் 26வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த அத்தாணி அருகேயுள்ள கீழ்வாணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் காளியண்ணனின் 26வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில், மாவட்டக்குழு உறுப்பினர் மாரிமுத்து, அந்தியூர் தாலுக்கா கமிட்டி உறுப்பினர் பழனிச்சாமி, அந்தியூர் தாலுக்கா செயலாளர் முருகேசன் ஆகியோர் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், காளியண்ணனின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

இதைத்தொடர்ந்து, மாவட்ட செயலாளர் ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயராகவுன், காளியண்ணனின் புதல்வர்கள் ராமமூர்த்தி, சண்முகசுந்தரம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோமதி, பவானி தாலுகா செயலாளர் மாணிக்கம், மாவட்டக்குழு உறுப்பினர் ஜெகநாதன், மாணவர் சங்க மாவட்ட தலைவர் வினிசா மற்றும் அந்தியூர், பவானி தாலுகா கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு காளியண்ணனின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செய்தனர்.

முன்னதாக, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி கட்சியின் செங்கொடியை ஏற்றினார். மேலும், காளியண்ணன் நினைவு தினத்தில் அந்தியூர் தாலுக்கா கமிட்டி சார்பில் மக்களிடம் வசூலிக்கப்பட்ட ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கட்சி வளர்ச்சி நிதி மற்றும், பவானி தாலுக்கா கமிட்டி சார்பில் மக்களிடம் வசூலிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் கட்சி வளர்ச்சி நிதியும், மாவட்டச் செயலாளர் ரகுராமனிடம் வழங்கப்பட்டது.

Updated On: 20 Jan 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!