/* */

அனைத்து பெயிண்டர்கள், ஓவியர்கள் நலச்சங்க மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

Erode news, Erode news today - தமிழ்நாடு அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நலச்சங்க மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) ஈரோட்டில் நடைபெற்றது.

HIGHLIGHTS

அனைத்து பெயிண்டர்கள், ஓவியர்கள் நலச்சங்க   மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
X

Erode news, Erode news today- அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நலச்சங்க மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

Erode news, Erode news today- அனைத்து பெயிண்டர்கள், ஓவியர்கள் நலச்சங்க மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.

தமிழ்நாடு அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நலச்சங்க மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) ஈரோட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் எம்.ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கொ.வெற்றி வேலன், மாவட்ட செயலாளர் பி.பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் துணைச் செயலாளர் எஸ்.ஜோசப் ராஜன் வரவேற்றார்.

கூட்டத்தில், நேரடி பெயிண்டிங் வேலை எடுத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளும் இருந்து தொழிலை மீட்பது, பெயிண்டிங் ஒப்பந்ததாரர்கள் ஓவியர் மற்றும் ஓவிய தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க அரசிடம் கேட்பது, விலை முரண்பாடுகளை தடுத்து நம்முடைய உழைப்பிற்கு நாமே விலை நிர்ணயம் செய்வது, பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்களுக்கு சங்கத்தின் அடையாள அட்டை வழங்கப்பட்டு காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும்.

வட மாநில தொழிலாளர்களால் தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுவதை தடுத்து வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பது மற்றும் இயற்கை பேரிடர் ஏற்படும் மாவட்டங்களில் உள்ள பெயிண்டர்களுக்கு மற்றும் ஓவியர்களுக்கு தலைமை சங்கத்திலிருந்து உதவி செய்வது ஆட்கள் பற்றாக்குறை இருந்தால் சங்கத்தின் மூலம் தமிழகம் முழுவதும் ஆட்கள் ஏற்பாடு செய்து கொடுப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் மாவட்ட பொருளாளர் பி.செல்வம் நன்றி கூறினார்.

Updated On: 28 Aug 2023 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  2. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  5. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  6. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  7. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி முக்கொம்பு மேலணையின் ஷட்டர் பழுதுபார்ப்பு பணி துவக்கம்
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!