/* */

கோபி அருகே விவசாயியை மிதித்து கொன்ற காட்டு யானையை பிடிக்க 2 கும்கிகள் வரவழைப்பு

ஈரோடு மாவட்டம் கோபி அருகே விவசாயியை மிதித்து கொன்ற காட்டு யானையை பிடிக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளன.

HIGHLIGHTS

கோபி அருகே விவசாயியை மிதித்து கொன்ற காட்டு யானையை பிடிக்க 2 கும்கிகள் வரவழைப்பு
X

லாரியில் அழைத்து வரப்பட்ட கும்கி  யானை.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம் அருகே உள்ள பெருமுகை ஊராட்சி வனப்பகுதியில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியேறிய ஆண் ஒற்றை காட்டு யானை ஆனது, வரப்பள்ளம் ஆற்றங்கரை வழியாக பக்கத்தில் உள்ள அடசபாளையம் தனியார் விவசாய தோட்ட பகுதியில் வந்துள்ளது. அப்போது அங்கே விவசாய கூலி வேலை செய்து கொண்டிருந்த துரை (எ) சித்தேஷ்வரன் என்பவரை மிதித்துக் கொன்றது. நேற்று முன்தினம் இரவு இந்த காட்டு யானையை பெருமுகை சஞ்சீவிராயன் கோவில் வனப்பகுதியில் பாதுகாப்புடன் விரட்டி அனுப்பினர்.

இந்த ஒற்றை யானையால் ஒருவர் உயிரிழந்ததால், மீண்டும் இந்த காட்டு யானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் வந்துவிடுமோ என்ற அச்சத்தால், இந்த ஒற்றை காட்டு யானையை பிடிக்க அந்தியூர் மற்றும் டி.என்.பாளையம் வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். யானை மீண்டும் ஊருக்குள் வராமல் இருக்க பெருமுகை சஞ்சீவிராயன் கோவில் குளத்தை ஒட்டியே வனத்துறையினர் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த காட்டு யானையை பிடிக்க வனத்துறையினருக்கு அனுமதி கிடைத்ததை அடுத்து முதுமலை பகுதியில் இருந்து இரண்டு லாரிகளில் பொம்மன், சீனிவாசன் என்ற பெயருடைய இரண்டு கும்கி யானைகள் நேற்று மாலை வரவழைக்கப்பட்டன. இந்த இரண்டு கும்கி யானைகளை டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி அருகேயுள்ள பெருமுகை ஊராட்சி சஞ்சீவிராயன் கோவில் பின்புறமாக உள்ள உரம்புகிணறு மாரியம்மன் கோவில் காட்டுக்குள் நேற்று இரவு லாரியில் இருந்து இறக்கினர்.

பெருமுகை வனப்பகுதியில் ட்ரோன் மூலமாக யானையை கண்டறிந்து மயக்க ஊசி செலுத்தி இரண்டு கும்கி யானைகளை கொண்டு அந்த ஒற்றை காட்டு யானையை பிடித்து வேறு வனப்பகுதியில் பகுதியில் கொண்டு சென்று விடும் நோக்கில் கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளன. ஒற்றை காட்டு யானையை கண்டவுடன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க, ஓசூர், முதுமலை மற்றும் சத்தியமங்கலம் பகுதிகளில் இருந்து வன கால்நடை மருத்துவர்களும் வரவழைக்கப்பட்டு, பெருமுகை வனத்தை ஒட்டிய பகுதிகளில் வனத்துறையினருடன் இணைந்து முகாமிட்டு முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.


இந்த ஒற்றை காட்டு யானையை பிடிக்க ஈரோடு மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தலைமையில் அந்தியூர் வனச்சரகர் உத்திரசாமி மற்றும் டி.என்.பாளையம் வனச்சரகர் கணேஷ் பாண்டியன் ஆகிய வன அலுவலர்கள், வனவர்கள், வன காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உட்பட 40-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஒற்றை யானையை பிடித்து வேறு வனப்பகுதியில் விடுவதற்கான முன்னெச்சரிக்கை பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

பெருமுகை வனத்தை ஒட்டிய பகுதிகளில் பொதுமக்கள் நடமாடுவதையோ? வாகனங்களில் வனப்பகுதிக்குள் வந்து செல்வதையோ? போட்டோ, வீடியோ எடுப்பதையோ? தவிர்த்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். ஒற்றைக் காட்டு யானையை கண்டறிய வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலமாக தொடர்ந்து கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Updated On: 6 May 2023 7:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  3. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  4. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  5. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  6. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  7. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  8. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  9. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’