Begin typing your search above and press return to search.
அத்தாணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண்களுக்கு கருத்தடை சிகிச்சை
அத்தாணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண்களுக்கு கருத்தடை சிகிச்சை நேற்று நடைபெற்றது.
HIGHLIGHTS

அத்தாணி ஆரம்ப சுகாதார நிலையம்..
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அத்தாணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று ஆண்களுக்கான நிரந்தர கருத்தடை சிகிச்சை எனப்படும் நவீன வாசக்டமி முகாம் நடைபெற்றது.
நடைபெற்ற முகாமில் அத்தாணி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 18 நபர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சை செய்து கொண்ட நபர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும், ஊட்டச்சத்து பொருட்கள் மற்றும் ஊக்கத்தொகையாக ரூ.1100 வழங்கப்பட்டது.