/* */

ஈரோடு மின் பகிர்மான வட்டத்தில், 3,254 மின் பராமரிப்பு பணிகள்

Erode news, Erode news today- ஈரோடு மின் பகிர்மான வட்டத்தில், 7 நாட்களில் 3,254 மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மின் பகிர்மான வட்டத்தில், 3,254 மின் பராமரிப்பு பணிகள்
X

Erode news, Erode news today- ஈரோடு மின் பகிர்மான வட்டத்தில், மின் பராமரிப்பு பணிகள் நடந்தன. (கோப்புப் படங்கள்).

Erode news, Erode news today- இதுகுறித்து, மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அறிவுறுத்தலின்படி பொது மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு, கடந்த ஜூலை 17-ம் தேதி முதல் 23-ம் தேதி வரையிலான நாட்களில் பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதனடிப்படையில் கடந்த 17-ம் தேதி முதல் 23-ம் தேதி வரையிலான நாட்களில், ஈரோடு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதில், இதுவரை ஈரோடு மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி கீழ்கண்டவாறு மேற்கொள்ளப்பட்டது.

வெவ்வேறு பகுதிகளுக்கு செல்லும் உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் பாதைகளில் உள்ள பல்வேறு இடங்களில் 2124 மரக்கிளைகளை வெட்டி அகற்றப்பட்டுள்ளது, 49 பழுதடைந்த மின் கம்பங்கள்,51 சாயந்த நிலையில் உள்ள மின் கம்பங்கள் சரி செய்தல்,108 பகுதிகளில் தாழ்வாக உள்ள மின் கம்பிகளை சரி செய்தல் 40 தாழ்வாக உள்ள மின்பாதைகளுக்கு இடையே நிறுவப்பட்ட மின்கம்பங்கள் 109 பழுதடைந்த இழுவை கம்பி சரி செய்தல்,88 பகுதிகளில் கண்டறியப்பட்ட பழுதடைந்த பீங்கான் மாற்றப்பட்டுள்ளது.

மேலும், 3 பகுதிகளில் கண்டறியப்பட்ட பழுதடைந்த மின் புதைவட பெட்டி சரி செய்தல் ,238 பகுதிகளில் கண்டறியப்பட்ட பழுதடைந்த ஜம்பர் வயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, 67 மின் மாற்றிகளில் உள்ள காற்று இடைவெளி திறப்பான் (AB Switch) சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது,

மேலும் 261 மின் மாற்றிகளில் உள்ள சிறப்பு பாராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது 94 மின் மாற்றிகளில் எண்ணெய் அளவு சரி பார்க்கப்பட்டுள்ளது, ஒரு பகுதியில் புதிதாக இருவழி திறப்பான் (Double Pole AB Switch) அமைக்கப்பட்டுள்ளது, 22 பகுதிகளில் கண்டறியப்பட்ட வெளியில் தெரியும் நிலையில் உள்ள புதைவட கேபிள் சரி செய்தல் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 27 July 2023 5:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  5. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  7. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  10. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...