/* */

80 அடிக்கும் கீழே குறைந்த பவானிசாகர் அணையின் நீர்மட்டம்

போதிய நீர்வரத்து இல்லாததாலும் நீர் வெளியேற்றத்தாலும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 80 அடிக்கும் கீழே குறைந்துள்ளது.

HIGHLIGHTS

80 அடிக்கும் கீழே குறைந்த பவானிசாகர் அணையின் நீர்மட்டம்
X

பவானிசாகர் அணை.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. பவானிசாகர் அணையின் மூலம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன், கீழ்பவானி வாய்க்கால்கள் வழியாக சுமார் 2.50 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நீலகிரி மலைப்பகுதியே பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாகும்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பவானிசாகர் அணை தன் முழு கொள்ளளவான 105 அடியை எட்டியது. இதைத்தொடர்ந்து அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்கிடையே அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை இல்லாத காரணத்தால் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்து கொண்டே வந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து 80 அடிக்கும் கீழே சென்றுவிட்டது.

இன்று (ஜூன் 15) வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்:-

நீர் மட்டம் - 79.97 அடி , (105 அடி)

நீர் இருப்பு - 15.67 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 1,014 கன அடி ,

நீர் வெளியேற்றம் வினாடிக்கு - 1,005 கன அடி ,

கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக 5 கன அடி நீரும், அரக்கன்-கோட்டை தடப்பள்ளி வாய்க்காலில் பாசனத்திற்காக சனத்திற்காக 800 கன அடி நீரும், குடிநீருக்காக தேவைக்காக பவானி ஆற்றில் 200 கன அடி நீரும் என மொத்தம் 1,005 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Updated On: 15 Jun 2023 10:05 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  2. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  3. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  7. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  9. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  10. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...