/* */

கிருஷ்ணாபுரம் அம்பேத்கர் வாசக சாலை நிலம் மீட்பு தொடர்பான ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணாபுரம் காலனியில் அம்பேத்கர் வாசக சாலை நிலம் மீட்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் கோபி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

HIGHLIGHTS

கிருஷ்ணாபுரம் அம்பேத்கர் வாசக சாலை நிலம் மீட்பு தொடர்பான ஆலோசனை கூட்டம்
X

கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த கிருஷ்ணாபுரம் காலனி பொதுமக்கள்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த கவுந்தப்பாடி அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, அம்பேத்கர் வாசக சாலை என்ற பெயரில் 8 சென்ட் பொது நிலம் வழங்கப்பட்டது. இந்த பொது நிலத்தை சிலர் போலி ஆவணங்கள் மூலம், ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனை கண்டித்து, அப்பகுதி பொதுமக்கள் தேர்தல் புறக்கணிக்கப்பு மற்றும் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து, நடைபெற்ற பேச்சுவார்த்தையில், உண்ணாவிரத போராட்டத்தினை கைவிட்டனர்.

இந்த நிலையில், கோபி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிலம் மீட்பு தொடர்பான, ஆலோசனை கூட்டம் மற்றும் பேச்சுவார்ததை கோட்டாட்சியர் பழனிதேவி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு, அம்பேத்கர் வாசக சாலை நிலம் குறித்த விவரங்களை அளித்தனர். பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை கூட்ட முடிவுகளை மாவட்ட ஆட்சியரிடம் அனுப்பி, ஆட்சியரின் உத்தரவின் அடிப்படையில் உரிய நடவடிக்கைக எடுக்கப்படும் என கோட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 8 March 2022 4:45 AM GMT

Related News