/* */

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 162 கன அடியாக சரிவு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு இன்று (ஆக.18) வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 162 கன அடியாக சரிவடைந்துள்ளது.

HIGHLIGHTS

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 162 கன அடியாக சரிவு
X

பவானிசாகர் அணை (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை, 105 அடி உயரமும் 32.8 டி.எம்.சி. கொள்ளளவும் கொண்டது. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள, 2 லட்சத்து, 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக, பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், அணைக்கு அவ்வப்போது அணைக்கு நீர்வரத்து குறைந்தும், அதிகரித்தும் என மாறி மாறி வந்து கொண்டுள்ளது. தற்போதைய, நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 162 கன அடியாக சரிவடைந்துள்ளது.

இன்று (ஆகஸ்ட் 18) வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்:-

நீர் மட்டம் - 83.05 அடி ,

நீர் இருப்பு - 17.35 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 162 கன அடி ,

நீர் வெளியேற்றம் வினாடிக்கு - 955 கன அடி ,

காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்கு 350 கன அடி நீரும், தடப்பள்ளி-அரக்கண் கோட்டை வாய்க்காலில் பாசனத்திற்கு 500 கன அடி நீரும், குடிநீருக்காக பவானி ஆற்றில் குடிநீருக்காக 100 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி நீரும் என மொத்தம் அணையில் இருந்து 955 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Updated On: 18 Aug 2023 5:00 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...