/* */

ஈரோட்டில் லோட்டஸ் ஹாஸ்பிடலில் மகளிர் மருத்துவப் பிரிவு தொடக்கம்

Erode news, Erode news today - ஈரோடு கொல்லம்பாளையத்தில் உள்ள லோட்டஸ் ஹாஸ்பிடலில் மகளிர் மருத்துவப் பிரிவினை அமைச்சர் முத்துசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

ஈரோட்டில் லோட்டஸ் ஹாஸ்பிடலில் மகளிர் மருத்துவப் பிரிவு தொடக்கம்
X

Erode news, Erode news today- மகளிர் மருத்துவப் பிரிவினை அமைச்சர் முத்துசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

Erode news, Erode news today- ஈரோடு கொல்லம்பாளையத்தில் உள்ள லோட்டஸ் ஹாஸ்பிடலில் மகளிர் மருத்துவப் பிரிவினை அமைச்சர் முத்துசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

ஈரோட்டில் என்.ஏ.சி.எச் அங்கீகாரம் பெற்ற முதல் பல துறை மருத்துவமனையான லோட்டஸ் ஹாஸ்பிடல் உள்ளது. இந்த ஹாஸ்பிடலின் மற்றொரு பிரம்மாண்டமான லோட்டஸ் மகளிர் மருத்துவம் மற்றும் அதிநவீன அறைகள் நேற்று தொடங்கப் பெற்றது. தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மதுவிலக்கு ஆயத்தீர்வு துறை அமைச்சர் சு.முத்துசாமி லோட்டஸ் மகளிர் மருத்துவ பிரிவை துவங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், ஈரோடு மேயர் நாகரத்தினம், துணை மேயர், செல்வராஜ், லோட்டஸ் ஆஸ்பிட்டலின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் .ஈ.கே.சகாதேவன், துணைத் தலைவர் எஸ்.குமரன், மகளிர், மகப்பேறு மற்றும் கரு சிகிச்சை நிபுணர் டாக்டர் ஈ.எஸ்.உஷா, செயற்கை கருத்தரித்தல் நிபுணர் டாக்டர் ஸ்ருதி ராஜேந்திரன், உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஈரோட்டின் முதன்மை மருத்துவர்கள், முன்னணி தொழிலதிபர்கள், ரோட்டரி, அரிமா மற்றும் தொழில்முறை சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இம்மகளிர் மருத்துவ மையத்தில் சிறப்பு பரிசோதனைகளாக 3டி ஸ்கேன் கருக்குழாய் பரிசோதனை ஹிஸ்டோ சல்பிங் கிராபி பரிசோதனைகள் செய்யப்படுகிறது. செயற்கை கருத்தரிப்பு முறைகள் ஐவிஎஃப் மற்றும் இக்ஸி மற்றும் கருப்பைக்குள் விந்து செலுத்துதல், இம்முறையில் உதவுவதற்கு கருமுட்டை, விந்து, கரு ஆகியவற்றை உறைவு தன்மையில் நீண்ட நாள் பாதுகாத்தல் வசதியும் அளிக்கப்படுகிறது. கருமுட்டை மற்றும் விந்து தானம் வழியாக அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி கருவுற உதவி செய்யப்படுகிறது. விந்து பரிசோதனை மற்றும் விந்து குறைபாடுகளுக்கான சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது.

Updated On: 4 Sep 2023 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  2. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  3. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  4. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  5. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  8. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  9. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  10. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!