/* */

‘மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் பாலைவனமாகும்’- வேல்முருகன் பேச்சு

Erode news, Erode news today- மேகதாதுவில் அணை கட்டினால் ஒட்டுமொத்த தமிழகமும் பாலைவனமாகும் என்று, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசினார்.

HIGHLIGHTS

‘மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் பாலைவனமாகும்’- வேல்முருகன் பேச்சு
X

Erode news, Erode news today- பவானியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன்.

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம் பவானியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமையில் கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கட்சியின் தலைவரும், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் கலந்துகொண்டு அரசுக்கு கோரிக்கை வைத்து பேசினார். அவர் பேசுகையில் கர்நாடகாவில் எதிர் எதிர் கருத்துக்களை கொண்ட காங்கிரஸ் மற்றும் பிஜேபி அரசுகளும் மாறி, மாறி, ஆட்சி புரிந்து வருகிறார்கள். ஆனால் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுப்பதில் மட்டும் இருவரும் ஒத்த கருத்து உடையவர்களாக மாறி, தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கிறார்கள்.

மத்திய அரசு காவிரியில் மேகதாது அணையை கட்ட கர்நாடகாவிற்கு அனுமதி கொடுத்துள்ளனர். அப்படி கர்நாடகாவில் மேகதாது அணை கட்டினால், தமிழகத்தில் 22 மாவட்டங்களில் உள்ள விவசாயிகளும் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். தமிழகமே பாலைவனமாகும் சூழல் உருவாகும் மேலும் கர்நாடக அரசு தரவேண்டிய 227 டி .எம். சி.தண்ணீரை முறையாக திறக்காததால் காவிரி நீரை நம்பி உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர். பருவமழை காலங்களில் கடலில் கலக்கும் நீரை தடுத்து தமிழகத்தில் உள்ள ஏரி குளம் .குட்டைகளுக்கு முறையான நீர் வழித்தடத்தை ஏற்படுத்தி தமிழகத்தில் வேளாண்மை திட்டங்களை செழிப்படையச் செய்ய வேண்டிய நிலை தமிழக அரசுக்கு உள்ளது.

தொடர்ந்து பவானி மற்றும் அம்மாபேட்டை ஒன்றிய பகுதிகளில் மிகப்பெரிய 17 ஏரிகள் உள்ளன.இவை அனைத்தும் இன்று தண்ணீரில் இல்லாமல் வறண்டு போய் உள்ளதால் அந்தப் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான விளைநிலங்கள் வறண்டு போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், ஒரு பக்கம் வசதி உள்ளவர்கள் பவானி ஆறுகளில் இருந்து ராட்சத குழாய்கள் அமைத்து 1500 ஹெச்பி மின் மோட்டார்களை பயன்படுத்தி நீர் ஏற்றி முப்போகமும் விவசாயம் செய்து வருகின்றனர். வசதி இல்லாதவர்கள் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அரசு இந்த பகுதியில் உபரி நீர் திட்டம் மூலம் அனைத்து தரப்பு விவசாயிகளும் பயனடையும் வகையில் ஆற்று நீரை அனைத்து விவசாய பெருமக்களுக்கும் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தலைமை நிலைய பேச்சாளர் கனல் கண்ணன், மாநில தலைமை ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜோதி குமாரவேல், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் திருப்பூர் சுடலை, தலைமை நிலைய பேச்சாளர் திருவெற்றியூர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்புரை ஆற்றினார்கள். மாவட்ட ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன், ஊடகப்பிரிவு துணை ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் ,மகளிர் அணி செயலாளர் சரஸ்வதி, ஒலகடம் நகரச் செயலாளர் ஆறுமுகம், பவானி நகர பொறுப்பாளர் குமரன், ஒன்றிய செயலாளர் நாகராஜ் அம்மாபேட்டை ஒன்றிய அமைப்பாளர் செல்வம், ஈரோடு மாநகர மாவட்ட முன்னாள் செயலாளர் சீனிவாசன், ஈரோடு மேற்கு மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் இம்மானுவேல் உட்பட கட்சியின் அனைத்து முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Updated On: 7 Aug 2023 4:00 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  3. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  4. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  5. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  6. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  7. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்