/* */

ஈரோடு மாவட்டத்தில் நாளை அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 ஊராட்சிகளிலும் நாளை கிராமசபை கூட்டம் நடக்க உள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் நாளை அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்
X

பைல் படம்

கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள் (26, ஜனவரி), தொழிலாளர் தினம் (1, மே), சுதந்திர தினம் (15, ஆகஸ்டு) காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்), உலக நீர் நாள் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது

கிராம சபைக் கூட்டதின் நோக்கம் என்பது ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புணர்வை ஊக்குவித்தல், வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்தப்படுதல் மற்றும் பயனாளிகளின் விருப்பத்தின்படி பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் சமூக தணிக்கைக்கு வழி வகுத்தல் ஆகியவையே

கிராம சபைக் கூட்ட நடவடிக்கைகள் என்பது கிராம மக்களின் கையிலிருக்கும் அதிகாரம் ஆகும்

இந்நிலையில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 ஊராட்சிகளிலும் நாளை காலை 11 மணிக்கு கிராமசபை கூட்டம் நடக்க உள்ளது.

இக்கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், திட்டப்பணிகள், ஊராட்சியின் தணிக்கை அறிக்கை பெறுதல், 100 நாள் வேலை திட்ட அறிக்கை, ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டம், கலைஞரின் வீடு வழங்கும் திட்ட மறு கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம், ஜல்ஜீவன் இயக்கம், சமுதாயம் சார்ந்த அமைப்புகளில் நிர்வாகிகளை சுழற்சி முறையில் மாற்றம் செய்தல், பண்ணை சார்ந்த தொழில்கள், பண்ணை சாரா தொழில்கள் மற்றும் இதர பொருட்கள் பற்றி விவாதிக்கப்படும்.

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் முறையாக நடைபெறுவதை கண்காணிக்க ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே கிராம சபை கூட்டத்தில் அந்தந்த ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்கும்படி, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 1 Oct 2022 1:39 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...