/* */

ஈரோடு மாவட்ட அரசு ஐ.டி.ஐ.,க்களில் மாணவர் சேர்க்கை ஆக.16 வரை நீட்டிப்பு

Erode news, Erode news today- கோபி மற்றும் ஈரோட்டில் உள்ள ஐ.டி.ஐ.,யில் மாணவர் நேரடி சேர்க்கைக்கு, ஆக.,16 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்ட அரசு ஐ.டி.ஐ.,க்களில் மாணவர் சேர்க்கை ஆக.16 வரை நீட்டிப்பு
X

Erode news, Erode news today- ஈரோடு மாவட்ட ஐ.டி.ஐ.,க்களில் மாணவர் சேர்க்கை நீட்டிப்பு.

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம் கோபி மற்றும் ஈரோட்டில் உள்ள ஐ.டி.ஐ.,யில் மாணவர் நேரடி சேர்க்கைக்கு ஆக.,16 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஈரோடு மாவட்டம் கோபி (பெரிய கொடிவேரி) மற்றும் ஈரோடு (காசிபாளையம்) அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023ம் பயிற்சி ஆண்டிற்கான சேர்க்கை விண்ணப்பங்கள் இணையவழி கலந்தாய்விற்காக இணையவழி (www.skilltraining.tn.gov.in) மூலம் விண்ணப்பிக்க வரும் ஆகஸ்ட் 16ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ( வயது வரம்பு : ஆண்கள் 14 - 40 / பெண்கள் : வயது வரம்பு இல்லை).

பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் தேர்ச்சி பெற்றவர்கள் எலக்ட்ரீசியன், பிட்டர், மெக்கானிக் மோட்டார் வெகிக்கிள், ரெப்ரிஜெரேசன் மற்றும் ஏர்கன்டிசனிங் டெக்னீசியன், டர்னர், மெஷினிஸ்ட், கோபா, ட்ராப்ட்மேன் சிவில், மற்றும் டெக்ஸ்டைல் வெட் ப்ராஸஸிங் டெக்னீஷியன் ஆகிய தொழிற்பிரிவுகளிலும், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வெல்டர் மற்றும் ஒயர்மேன் தொழிற்பிரிவிலும் விண்ணப்பிக்கலாம்.

மேலும், டாடா டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து தொழில்நுட்ப மையங்களாக உயர்த்தப்பட்டு அதன் கீழ் புதிய தொழிற்பிரிவுகளான அட்வான்ஸ்டு சிஎன்சி மிஸினிங் டெக்னீஸியன் 2 வருடம், மேனுபேக்ச்சரிங் கண்ட்ரோல் & ஆட்டோமேசன் - 1 வருடம், இன்டஸ்ரியல் ரோபோடிக்ஸ் & டிஜிட்டல் மேனுபேக்ச்சரிங் டெக்னீஸியன் - 1 வருடம், பேசிக் டிசைனர் மற்றும் விர்ச்சுவல் வெரிபையர் 2 வருடம், போன்ற தொழிற்பிரிவிலும், அரசு இட ஒதுக்கீட்டில் கலந்தாய்வின் மூலம் சேர்ந்து பயில விண்ணப்பிக்கலாம். மேலும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாதவர்கள் கோபிசெட்டிபாளையம் மற்றும் ஈரோடு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தினை நேரில் அணுகலாம்.

பயிற்சியில் சேரும் மாணவ மாணவியருக்கு சிறந்த கட்டணமில்லா பயிற்சியுடன் இலவச தங்கும் விடுதி, தமிழக அரசால் மாதம் ரூ.750 உதவித் தொகை, புதுமைப்பெண் திட்டத்தில் தகுதியான மாணவியர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை, விலையில்லா பாடபுத்தகங்கள், விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, வரைபடக் கருவிகள், தையற்கூலியுடன் இரண்டு செட் சீருடை, காலணி, மற்றும் கட்டணமில்லா பேருந்து பாஸ் ஆகிய சலுகைகள் வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், பெரிய கொடிவேரி, கோபிசெட்டிபாளையம், மற்றும் முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஈரோடு காசிபாளையம்) அவர்களை நேரிலோ அல்லது 94990 55705, 04258-233234, 0424-2275244 ஆகிய தொலைப்பேசி எண்களிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 5 Aug 2023 7:28 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  2. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  3. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  4. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  5. கல்வி
    ஆசிரியர் பணி கலந்தாய்வு தொடர்பாக பள்ளி கல்வி துறை இயக்குனரகம்...
  6. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  7. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  8. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்