/* */

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை அருகே மேம்பால தூணில் அரசு பேருந்து மோதி விபத்து

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை அருகே மேம்பால தூணில் அரசு பேருந்து மோதிய விபத்தில் டிரைவர் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை அருகே மேம்பால தூணில் அரசு பேருந்து மோதி விபத்து
X

விபத்துக்குள்ளான அரசு பேருந்து.

ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து இன்று காலை ஊட்டியை நோக்கி, அரசு பேருந்து ஒன்று 40 பயணிகளுடன் புறப்பட்டது. பேருந்தின் டிரைவராக அன்னூரை சேர்ந்த சக்திவேல் என்பவரும், நடத்துனராக வெள்ளிங்கிரி என்பவரும் இருந்தனர்.

அப்போது, பேருந்து பெருந்துறை சாலையில், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்த, தனியார் பேருந்தை முந்தி செல்ல முயன்றபோது, அங்கிருந்த மேம்பால தூணின் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.

இதில், டிரைவர் சக்திவேல் உட்பட்ட 15 பயணிகள் காயமடைந்தனர். இதனையடுத்து, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 25 Jun 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  4. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  5. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?