கோபி அருகே காதலிக்கு இன்று திருமணம்; வாலிபர் தற்கொலை

கோபிசெட்டிபாளையம் அருகே காதலிக்கு இன்று திருமணம் நடைபெறுவதால் மனம் உடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கோபி அருகே காதலிக்கு இன்று திருமணம்; வாலிபர் தற்கொலை
X

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள உக்கரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி. இவரது மனைவி பானுமதி. இவர்களுக்கு கிரண் ராஜ் கிஷோர் (24) என்ற மகன் உள்ளார். டிப்ளமோ படித்து உள்ளார். இவரும் பக்கத்து தெருவைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் கிரண்ராஜ் கிஷோர் காதலித்த பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் இன்று காலை திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. இதுபற்றி தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்த கிரண் ராஜ் கிஷோர் சோகத்தில் இருந்து வந்தார். மேலும் தனது காதலிக்கு திருமணம் நடைபெறுவதால் மனம் உடைந்து காணப்பட்ட அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

அதன்படி நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கில் தொங்கினார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கிரண் ராஜ் கிஷோர் இறந்து விட்டார்.

காதலி திருமணம் நடந்த நாளில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Updated On: 10 Nov 2021 3:45 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  அ.தி.மு.க ஆட்சியில் ரூ.811 கோடி முறைகேடு: 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்...
 2. அரியலூர்
  ஜெயங்கொண்டம் காந்திபூங்கா முன்பு இஸ்லாமிய இயக்கங்கள் கண்டன...
 3. குமாரபாளையம்
  நாமக்கல் மாவட்ட தி.மு.க. செயலர் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள்
 4. ஆரணி
  ஆரணியில் திருவண்ணாமலை மின் பகிர்மான வட்ட பொதுக்குழு கூட்டம்
 5. ஆரணி
  ஆரணி அருகே புதிய கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை
 6. சோழவந்தான்
  அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்க நடவடிக்கை: அமைச்சர் ...
 7. சினிமா
  ஆர்.பார்த்திபனின் 'இரவின் நிழல்' ரிலீஸ் தேதி மாற்றம்..!
 8. டாக்டர் சார்
  Kayam Tablets Uses in Tamil காயம் மாத்திரைகள் பயன்கள் தமிழில்
 9. சென்னை
  சென்னையில் மரம் விழுந்து பெண் உயிரிழப்பு: மேயர் பிரியா விளக்கம்...!
 10. குமாரபாளையம்
  வாரச்சந்தையில் தொடர் செல்போன் திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை