Begin typing your search above and press return to search.
நம்பியூர் அருகே கீழ்பவானி வாய்க்கால் கரையில் திடீர் பள்ளம்: கிராம மக்கள் அச்சம்
கீழ்பவானி வாய்க்கால் கரையில் வாய்க்கால் பாலத்தின் அருகே இடது கரையின் மையப்பகுதியில் பள்ளம் விழுந்ததால் பரபரப்பு.
HIGHLIGHTS

நம்பியூர் ஒன்றியம் தொட்டிபாளையம்-கூடக்கரை வழியே, கீழ்பவானி பிரதான வாய்க்கால் செல்கிறது. தற்போது முதல் போக பாசனத்துக்காக வினாடிக்கு, 2,300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 6:30 மணிக்கு வாய்க்கால் பாலத்தின் அருகே இடது கரையின் மையப்பகுதியில் திடீரென ஓட்டை விழுந்தது.
ஒரு அடி ஆழத்துக்கு இருந்ததால், அப்பகுதி விவசாயிகள், கோபி பொதுப்பணித்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பொதுப்பணித்துறையினர் பொக்லைன் மூலம் மண் கொட்டி கரையை சீரமைக்கும் பணியை மேற்காெண்டனர்.
கீழ்பவானி வாய்க்கால் பாலத்தின் அருகே இடது கரையின் மையப்பகுதியில் விழுந்த பள்ளம்.