Begin typing your search above and press return to search.
கோபி அருகே கார், மொபட் மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்து அதிகாரி பலி
கோபி அருகே கார், மொபட் மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்து அதிகாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
HIGHLIGHTS

விபத்து ஏற்படுத்திய கார்.
ஈரோடு வீரப்பன்சத்திரம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 62). ஓய்வுபெற்ற போக்குவரத்து அதிகாரி. நேற்று ஜெகநாதன், கோபி அருகே கூகலூர் தாழைகொம்பு புதூரில் உள்ள அவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்திற்கு மொபட்டில் புறப்பட்டார். ஒத்த குதிரை அருகே உள்ள கூகலூர் பிரிவு அருகே திருப்ப முயன்றார்.
அப்போது அந்த வழியாக சேலம் மாவட்டம் சின்ன பள்ளப்பட்டியை சேர்ந்த சுந்தர் ராமன் என்பவர் காரை ஓட்டி வந்தார். எதிர்பாராதவிரதமாக காரும், மொபட்டும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஜெகநாதன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.