ரேசன் அரிசி கடத்தல் : இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் உட்பட 4 பேர் கைது

கோபிசெட்டிபாளைம் அருகே ரேசன் அரிசி கடத்தியதாக இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கணபதிபாளையத்தில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், கோபி போலீசார் கணபதிபாளையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ ஒன்றை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில் 400 கிலோ எடையுள்ள 20 மூட்டை ரேசன் அரசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் மேற்கொண்ட விசாரணையின்போது, ரேசன் அரிசி கடத்தியவர் கணபதிபாளையத்தை சேர்ந்த வேலாயுதம், பவானிசாகரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமினை சேர்ந்த மதியழகன், விஜயன் மற்றும் விஜய் என்கிற கேதீஸ்வரன் என்பதும் அதிக விலைக்கு விற்பதற்காக ரேசன் அரிசியை கடத்தியதாகவும் ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து, அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 400 கிலோ ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு ஆட்டோ ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 7 July 2021 10:30 AM GMT

Related News