/* */

குண்டேரிபள்ளம் அணையிலிருந்து விவசாய நிலத்திற்கு நீர் எடுக்க எதிர்ப்பு

டி.என்.பாளையம் அருகே குண்டேரிபள்ளம் அணையிலிருந்து விவசாய நிலத்திற்கு நீர் எடுக்க எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு.

HIGHLIGHTS

குண்டேரிபள்ளம் அணையிலிருந்து விவசாய நிலத்திற்கு நீர் எடுக்க எதிர்ப்பு
X

பதட்டமான சூழ்நிலையில் குவிக்கப்பட்டுள்ள போலீசார். 

கோபி வினோபா நகரை சேர்ந்த தங்கவேல், முருகேசன், ஆண்டமுத்து , ஈஸ்வரன், செல்லப்பன் மற்றும் ராணி ஆகிய 6 பேருக்கு சொந்தமான 50 ஏக்கர் விவசாய நிலம் குண்டேரிப்பள்ளம் அணையிலிருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு போதிய தண்ணீர் வசதி இல்லாததால் குண்டேரிப்பள்ளம் அணை அருகில் உள்ள தங்கவேல் என்பவர் நிலத்திலிருந்து ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் கொண்டு செல்ல கடந்த மூன்று ஆண்டுகளாக குழாய் அமைப்பதற்கு முயற்சித்தனர்.

ஆனால் அணையை சுற்றியுள்ள குண்டேரிப்பள்ளம், கொங்கர்பாளையம் , வினோபா நகர் , வாணிப்புத்தூர் ஆகிய 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படுவதோடு அணையை சுற்றியுள்ள 2,500 ஏக்கர் விவசாய விளை நிலங்கள் பாதிக்கப்படும் என்பதாலும் அணையை சுற்றியுள்ள கிராம மக்கள் சாலை மறியலிலும் , போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று 6 பேரிடமும் குழாய் அமைக்க நீதிமன்ற உத்தரவு இருப்பதால் 4.5 கிலோ மீட்டர் தொலைவில் குழாய் அமைக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 1.5 கிலோமீட்டர் குழாய் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

குண்டேரிப்பள்ளம் அணையிலிருந்து தண்ணீர் கொண்டு செல்ல கிராம மக்கள் எதிர்ப்பை தொடர்ந்து தண்ணீர் கொண்டு செல்ல குழாய் அமைக்கும் பணி பாதுகாப்பிற்காக 4 டிஎஸ்பி தலைமையில் 320 போலீசார் குவிக்கப்பட்டது. அப்பகுதியில் போலீசார் குவிக்கபட்டதால் பதற்றம் நிலவுகிறது.




இதுபற்றி அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான ஆண்களும், பெண்களும் நேற்று காலை வினோபாநகர்-கொங்கர்பாளையம் ரோட்டில் திரண்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வினோபா நகரில் இருந்து கோபிக்கு பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சையும் சிறைபிடித்தனர்.

இதுபற்றி அறிந்ததும் கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவி, கோபி தாசில்தார் தியாகராஜ் மற்றும் வருவாய் துறையினர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் அவர்களிடம் கூறும்போது, 'கோர்ட்டை நாடி இன்னும் 15 நாட்களுக்குள் பணியை நிறுத்துவதற்கான உத்தரவை பெற்று வாருங்கள். அவ்வாறு இல்லையென்றால் மீண்டும் பணி தொடங்கப்படும்' என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் பஸ்சை விடுவித்து சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Updated On: 21 Oct 2021 10:33 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாபாத்திரங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    கிரஷ் என்பதும் காதல் என்பதும் ஒன்றா? அல்லது இரண்டிற்கும் வித்தியாசம்...
  3. டாக்டர் சார்
    மன அழுத்தம் மொத்த நோய்களுக்கும் வித்திடும்..!
  4. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள்...
  5. வீடியோ
    Setting Game விளையாடும் திமுக, அதிமுக குற்றச்சாட்டும் Annamalai...
  6. மதுரை மாநகர்
    மதுரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு, அமைச்சர்...
  7. ஈரோடு
    பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 40வது ஆண்டு விழா
  8. திருப்பரங்குன்றம்
    சோழவந்தானில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட விவசாயிகள் கோரிக்கை..!
  9. கல்வி
    ஒரு நாட்டுக்கு கஜானாவை விட உயர்ந்தது எது? அசந்து போவீங்க..!
  10. ஈரோடு
    மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதிகள்: ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர்...