பங்களாபுதூர் அருகே மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் பலி

பங்களாபுதூர் அருகே மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பங்களாபுதூர் அருகே மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் பலி
X

பங்களாபுதூர் காவல்நிலையம்.

ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் அருகேயுள்ள அண்ணாநகரில் ஈஸ்வரன் என்பவர் வீடு கட்டி வருகிறார். இங்கு வடமாநிலத்தைச் சேர்ந்த சுனில் (எ) புளுநாயக் (34) தனது மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் தங்கி கட்டிடப் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், நேற்று மதியம் 2 மணியளவில் கட்டிடப் பணியின்போது முதல் மாடியில் இருந்த புளுநாயக்கிற்கு உடன் பணியாற்றும் சுக்ரீப் நாயக் என்பவர் சென்டரிங் கம்பியை எடுத்து மேலே கொடுத்துள்ளார்.


அப்போது எதிர்பாராத விதமாக அருகில் உள்ள மின்கம்பியில் சென்டரிங் கம்பி படுவதை கவனிக்காமல் கம்பியை வாங்கும்போது புளுநாயக் மீது மின்சாரம் தாக்கியது. இதில் அவர் முதல் மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் புளுநாயக்கை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு புளுநாயக்கை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை அடுத்து புளுநாயக் உடல் பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Updated On: 2021-10-31T04:04:01+05:30

Related News