நகர்புற பெண்களுக்கு பேருந்து கட்டணம் கிடையாது: கனிமொழி

நகர் புற பெண்களுக்கு பேருந்து கட்டணம் கிடையாது. காசுகேட்டால் தளபதியை கேளுங்கள் என்று சொல்லாம். - திமுக எம்.பி கனிமொழி.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நகர்புற பெண்களுக்கு பேருந்து கட்டணம் கிடையாது: கனிமொழி
X

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மணிமாறனை ஆதரித்து மாநில மகளிரணி செயலாளரும் எம்.பியுமான கனிமொழி கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது திறந்த வாகனத்தில் நின்று வாக்காளர் மத்தியில் பேசுகையில். இந்த தேர்தல் என்பது கட்சி ஆட்சி பொறுப்புக்கு வருவது மட்டுமல்ல. தளபதி அவர்கள் முதல்வராக வரவேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். பழனிச்சாமி தமிழகத்தின் அத்தனை உரிமைகளையும் டெல்லியில் அடகு வைத்துள்ளார். அதனால் தமிழ்நாட்டை மீட்டெடுக்கவும், தலைமுறையை பாதுகாக்கவும் உரிமைகளை மீட்டெடுக்க வெற்றி பெறவேண்டும் என்பதை புரிந்து கொண்டு, இந்த தேர்தலில் நாம் பணியாற்ற வேண்டும்.

கடந்த பத்து ஆண்டுகளாக இந்த ஆட்சி பெண்களுக்கு என்ன செய்திருக்கிறது என்று சிந்தித்து பார்க்கவேண்டும். சுய உதவிக்குழுகள் செயல்பட விடவில்லை. பொள்ளாச்சியில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இன்று வரை தண்டிக்கப்படவில்லை. பெண்கள் சுயமரியாதை பறிக்கப்பட்டுள்ளது. நமக்கெல்லாம் பாதுகாப்பாக இருக்க வேண்டிய பெண் போலீஸ் அதிகாரிக்கே பாதுகாப்பில்லை மிரட்டப்படுகிறார். நீதிமன்றம் கண்டித்த பிறகுதான் அந்த அதிகாரி தண்டிக்கப்படுகிறார். பெண் அதிகாரிகளுக்கே பாதுகாப்பில்லை. சாதராண பொண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கப்போகிறது. படித்த இளம் பெண்கள், இளைஞர்கள் என 23 லட்சம் பேருக்கு வேலையும் இல்லை. திமுக ஆட்சி வந்தவுடன் 3.50 லட்சம் காலிப்பணிடங்கள் நிரம்பப்படும். தமிழ்நாட்டில் உள்ள இளம் பெண்கள் இளைஞர்களுக்கு வழங்கப்படும் எனவும் தொழில் முதலீடுகள் கொண்டுவரப்படும் எனவும் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசு வேலையும் விற்பனை செய்யப்படுகிறது. சிலிண்டர் விலை பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும். நகர் புற பெண்களுக்கு பேருந்து கட்டணம் கிடையாது.

காசுகேட்டால் தளபதியை கேளுங்கள் என்று சொல்லாம். கல்விக்கடனை ரத்து செய்வதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். கலைஞர் வழியில் வந்துள்ள தளபதி அவர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றி தருவார். அதிமுகவினர் செய்வீர்களா செய்வீர்களா என்று கேட்டு எதையுமே செய்யவில்லை. இந்த ஆட்சியில் எல்லாத்துக்கும் கமிசன் கொரோனாவில் கூட கமிசன் வாங்கியுள்ளனர். முதல்வர் சொந்தங்கள் ஊர்காரர்களுக்கு மட்டுமே டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. வெற்றிநடை பேடுகிறது என்று விளப்பர பாடல் போட்டால் மட்டும் போதுமா? குடிக்க தண்ணீர் இல்லை, வேலையில்லை எதுவுமே இல்லை அப்புறம் எப்படி வெற்றி நடைபேடுகிறது. அவர்கள் மட்டுமே வெற்றி நடை போடுகிறார்கள். பள்ளிக் கல்வித்துறைக்கு என்ன செய்தார். துறை தெரியாத அமைச்சர் செங்கோட்யைன். குழப்பமான ஒரு அமைச்சகம் வேறு எந்த துறையுமே இருக்க முடியாது. காலையில் ஒரு அறிவிப்பு மதியம் ஒரு அறிவிப்பு, அதிகாரிகள் ஒன்று என குழப்பான துறை இருக்கிறது என்றால் அது பள்ளிக்கல்வித்துறை தான். மக்களுக்குகாக எந்தத்திட்டத்தையும் செய்து தராத அரசு இருக்கிறது. தேர்தல் அறிக்கையில் அவர்கள் சொல்லியுள்ள எதையுமே நிறைவேற்றி தந்ததில்லை. மக்களுக்கு பயனில்லாத ஆட்சி. அரசை எதிர்த்து கேள்வி கேட்டால் அவர்கள் பழிவாங்கப்படுகிறார்கள். இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். தமிழ்நாட்டையம் சுயமரியாதையை மீட்டெடுக்க வேண்டும். அடிமை ஆட்சியை மீட்டெடுக்க வேண்டும் என பேசினார்.

Updated On: 2021-03-20T16:21:07+05:30

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  குமாரபாளையம்: பொது வழியில் காரை நிறுத்தியதை தட்டி கேட்டவருக்கு அடி,...
 2. இந்தியா
  நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை வருது..!
 3. புதுக்கோட்டை
  எழுத்தாளர் அகிலன் பெயரில் நூலகம் அமைக்கப்படும்: புதுக்கோட்டை எம்எல்ஏ ...
 4. காஞ்சிபுரம்
  விவசாயிகள் வீண் செலவை குறைக்கும் நானோ யூரியா: காஞ்சிபுரம் ஆட்சியர்...
 5. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைகேட்பு முகாம்: பல்வேறு கோரிக்கைக்காக...
 6. குமாரபாளையம்
  குமாரபாளையம் லட்சுமி நாராயண சுவாமி கோவில் உண்டியல் திறப்பு
 7. காஞ்சிபுரம்
  முதல்வர் நிகழ்வில் முகக்கவசம் அணியாமல் உடன்பிறப்புகள் அலட்சியம்..!...
 8. லைஃப்ஸ்டைல்
  Thiripala Suranam benefits in Tamil திரிபலா சூரணம் பயன்கள் தமிழில்
 9. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் ரத்ததான முகாம்
 10. புதுக்கோட்டை
  தேசிய வருவாய்வழி திறனறித்தேர்வு: மேலப்பட்டி மாணவர்களுக்கு வாசகர்...