தேமுதிகவில் இருந்து 50பேர் விலகி அதிமுகவில் இணைந்தனர்

ஈரோடு வடக்கு மாவட்ட தேமுதிக மகளிரணி செயலாளர் ருக்மணி தலைமையில், 50க்கும் மேற்பட்டவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தேமுதிகவில் இருந்து 50பேர் விலகி அதிமுகவில் இணைந்தனர்
X

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் அரசியலில் பல்வேறு பரபரப்புகள் ஏற்பட்டு வருகிறது. கூட்டணி உடன்பாடு இழுப்பறி தனித்துப் போட்டி என பல கட்டங்களில் அரசியல் நகர்வுகள் இருந்து வருகிறது. அதில் கட்சி மாற்றம் என்பது அனைத்து பகுதிகளிலும் பரலாக இருந்து வருகிறது.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள அமைச்சர் செங்கோட்டையன் இல்லத்தில், தேமுதிக கட்சியில் ஈரோடு வடக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் ருக்மணி தலைமையில் 50க்கும் மேற்பட்டவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் அமைச்சர் செங்கோட்டையன் வாழ்த்துகளை தெரிவித்தார்.

Updated On: 14 March 2021 2:00 PM GMT

Related News