/* */

கோபி: ரூ.30.50 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளை துவக்கி வைத்தார் அமைச்சர் முத்துசாமி

கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் ஊராட்சியில், ரூ.30.50 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள் அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

கோபி: ரூ.30.50 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளை துவக்கி வைத்தார் அமைச்சர் முத்துசாமி
X

மொடச்சூர் ஊராட்சியில், ரூ.30.50 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளை, அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகில் உள்ள மொடச்சூர் ஊராட்சியில் திட்டப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் தலைமை தாங்கினார். கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவி முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் வரவேற்றார்.

விழாவில், தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு, ஊராட்சி மன்ற அலுவலகத்தின் சுற்றுச்சுவர் கட்டுதல், 5 இடங்களில் வடிகால் அமைத்தல் என ரூ.30 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பிலான திட்டப்பணிகளை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

ஊராட்சி மன்றத்தலைவர் சரவணகுமார், சொந்தநிதியில் இருந்து கொரோனோ நிவாரணத்திற்காக முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையை, அமைச்சரிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது, அங்கிருந்த தூய்மை பணியாளர்கள், தங்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்கினார்கள். தொடர்ந்து, அ.தி.மு.க.வில் இருந்து விலகிய 50க்கும் மேற்பட்டவர்கள் அமைச்சர் சு.முத்துசாமி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி இணைச்செயலாளர் கள்ளிப்பட்டி மணி, ஈரோடு வடக்குமாவட்ட தி.மு.க. செயலாளர் என்.நல்லசிவம், தெற்கு ஒன்றிய செயலாளர் முருகன், குமணன், சிந்துரவிச்சந்திரன் உட்பட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

Updated On: 4 July 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  2. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  3. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  4. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  6. ஈரோடு
    ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து...
  7. ஈரோடு
    ஈரோடு திருநகர் காலனி நந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 37வது ஆண்டு...
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல்...
  9. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  10. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!