/* */

கோபி அருகே கொடிவேரி அணை நாளைமுதல் திறப்பு: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை, நாளை முதல் திறக்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

HIGHLIGHTS

கோபி அருகே கொடிவேரி அணை நாளைமுதல் திறப்பு: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
X

கொடிவேரி அணை (கோப்பு படம்) 

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை, நாளை முதல் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

கொரோனா பரவல் காரணமாக, சுமார் ஒன்றரை ஆண்டுகளாக, இந்த அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனினும், கொரோனா பரவல் குறைந்ததால், கடந்த மாதம் கொடிவேரி அணை திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிக்கப்பட்டது.

அதேநேரம், பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழையால், அணையின் நீர் மட்டம் 102 அடி வரை சென்றது. இதன் காரணமாக, அணையின் பாதுகாப்பு கருதி 5,700 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு உண்டானது; கொடிவேரி அணை மீண்டும் மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Updated On: 3 Oct 2021 10:45 AM GMT

Related News