Begin typing your search above and press return to search.
கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை
கோபி அருகே உள்ள கொடிவேரி அணை நாளை மகாளய அமாவாசை காரணமாக சுற்றுலாபயணிகளுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்
HIGHLIGHTS

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகேயுள்ல கொடிவேரி அணைக்கட்டு
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை 550 ஆண்டுகளுக்கு முன்பு பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையாகும். சுமார் 15 அடி உயரத்திலிருந்து நீர் அருவி போல கொட்டுவதால் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி கோவை ,திருப்பூர், கரூர் , சேலம் ,நாமக்கம் போன்ற பல மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா தொற்று பரவல் காரணமாக அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மீண்டும் அணை திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் நாளை மகாளய அமாவாசை காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டுள்ளார்.