/* */

தலையில் தண்ணீர் குடத்துடன் வந்த சுயேட்சை வேட்பாளர்

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் குமார் என்ற இரும்பு பட்டரை தொழிலாளி சுயேட்சை வேட்பாளராக போட்டியிட, பேருந்து நிலையத்திலிருந்து தண்ணீர் குடத்துடன் கோட்டாட்சியர் அலுவலகம் வந்து வேட்புமனு தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

HIGHLIGHTS

தலையில் தண்ணீர் குடத்துடன் வந்த சுயேட்சை வேட்பாளர்
X

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிறுவலூரை சேர்ந்தவர் குமார். இவர் அங்குள்ள இரும்பு பட்டரை ஒன்றில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற கோரி திருப்பூர் தொகுதியில் போட்டிட்டு 1400 வாக்குகளை பெற்றார். வரும் சட்டமன்ற தேர்தலிலும் இதே கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியின் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து தலையில் தண்ணீர் குடத்துடன் இரு சிறுவர்களுடன் நடைபயணமாக கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவலகம் வரை சென்ற பின் தேர்தல் நடத்தும் அலுவலர் பழனிதேவியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். சுயேட்சை வேட்பாளர் ஒருவர் தலையில் தண்ணீர் குடத்துடன் வேட்புமனுவை தாக்கல் செய்ய நடை பயணமாக சென்றதை பொதுமக்கள் ஆச்சர்யத்துடனும் அதியத்துடனும் பார்த்தனர்.

Updated On: 17 March 2021 9:17 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  10. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்