சாக்கடையில் தவறி விழுந்த குதிரை: தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்

கோபிசெட்டிபாளையம் பகுதியில் சாக்கடையில் தவறி விழுந்த குதிரையை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சாக்கடையில் தவறி விழுந்த குதிரை: தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்
X

கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதியில் பலர் குதிரைகளை வளர்த்து வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் ஏராளமான குதிரைகள் ரோட்டில் சுற்றி திரிகின்றன.இந்த நிலையில் கோபி நகராட்சி சுப்பு நகர் பகுதியில் இன்று காலை ஒரு குதிரை ரோட்டில் சுற்றி திரிந்து கொண்டு இருந்தது. அந்த குதிரை அந்த பகுதியில் உள்ள சாக்கடை அருகே மேய்ந்து கொண்டு இருந்தது.

அந்த குதிரை திடீரென சாக்கடையில் தவறி விழுந்தது. இதையடுத்து குதிரை சத்தம் போட்டு கொண்டு இருந்தது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சாக்கடையில் விழுந்த குதிரையை உயிருடன் மீட்டனர்.

Updated On: 3 Nov 2021 8:45 AM GMT

Related News