கோபியில் விவசாயிகள் நெல் மணிகளை சாலையில் கொட்டி சாலை மறியல்

கோபியில் விவசாயிகள் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கோபியில் விவசாயிகள் நெல் மணிகளை சாலையில் கொட்டி சாலை மறியல்
X

கோபிச்செட்டியம் அருகே உள்ள கரட்டடிபாளையம் மற்றும் புதுக்கரைப்புதூர் பகுதிகளில் விவசாயிகள் நெல் மணிகளை சாலையில் கொட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர் .கோபி அருகே உள்ள கரட்டடிபாளையத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டுவருகிறது. நாள்தோறும் 1000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த நான்கு நாட்களாக ஏக்கருக்கு 60 சிப்பம் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 10 சிப்பம் வரை அதிக விளைச்சல் உள்ளது. விளைச்சல் அதிகரித்து உள்ள நிலையில், கொள்முதல் அளவை குறைத்ததால் விவசாயிகள் 10 முதல் 20 சிப்பம் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மீதமான நெல்மணிகள் முளைத்ததால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இதனால் கோபி-சத்தியமங்கலம் சாலையில் நெல்மணிகளை சாலையில் கொட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோபி வட்டாட்சியர் தியாகராஜன் பேச்சுவார்த்தை நடத்தினர் இதில் விவசாயிகள் 80 சிப்பம் கொள்முதல் செய்யவேண்டும் எனவும், முளைத்த நெல்மணிகளுக்கு உரிய இழப்பிடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். இதனால் கோபி - சத்தி சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல் கோபி - அந்தியூர் சாலையில் புதுக்கரைப்புதூர் பகுதியில் இதே கோரிக்கையை வலியுத்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர் . இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Updated On: 5 Oct 2021 5:00 PM GMT

Related News