நம்பியூர் அருகே வாகனம் மோதி விவசாயி பலி: போலீசார் விசாரணை

நம்பியூர் அருகே வாகனம் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நம்பியூர் அருகே வாகனம் மோதி விவசாயி பலி: போலீசார் விசாரணை
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே உள்ள பிலியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி என்கிற கருப்புசாமி (வயது 70). விவசாயி. இந்நிலையில் கருப்புசாமி நம்பியூர்-:கோவை மெயின் ரோட்டில் உள்ள அரசு மதுபானக் கடைக்கு சென்று விட்டு மீண்டும் தனது மொபட்டில் வீட்டிற்கு செல்வதற்காக ரோட்டை கடந்தார்.

அப்போது பின்னால் வந்த பனியன் கம்பெனிக்கு ஆட்களை ஏற்றி செல்லும் வேன் கருப்புசாமி மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் அவருக்கு தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த அடிபட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் கருப்புசாமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். எனினும்சிகிச்சை பலனின்றி கருப்புசாமி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வரப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ மாணிக்கம் வேன் ஓட்டுனர் நம்பியூர் அருகேயுள்ள குருமந்தூர் ஜலில் (35) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 15 Oct 2021 9:30 AM GMT

Related News