/* */

கோபி அருகே வாய்க்காலில் கவிழ்ந்த பள்ளி வாகனம்

Erode news, Erode news today- கோபி அருகே, மாணவியரை ஏற்றிக்கொண்டு சென்ற பள்ளி வாகனம் கவிழ்ந்தது.

HIGHLIGHTS

கோபி அருகே வாய்க்காலில் கவிழ்ந்த பள்ளி வாகனம்
X

கோபி அருகே, பள்ளி வாகனம் விபத்தில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக, மாணவியர் உயிர் தப்பினர் (கோப்பு படம்)

Erode news, Erode news Erode news, Erode news today- கோபி அருகே பள்ளிக்கூட வேன் வயலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 2 மாணவிகள்- டிரைவர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சத்தியமங்கலத்தில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியின் வேன் மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வருவதற்காக நேற்று காலை சென்று கொண்டு இருந்தது. கோபிச்செட்டிபாளையம் அருகே, கூடக்கரை என்ற இடத்தில் ஒரு மாணவியையும், மோடர்பாளையம் கிராமத்தில் ஒரு மாணவியையும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பள்ளியை நோக்கி வாகனம் சென்றது.

உக்கரம் என்ற பகுதி அருகே, பள்ளி வாகனம் சென்றபோது எதிரே வந்த பைக்குக்கு வழி விடுவதற்காக டிரைவர் சண்முகம் வேனை ரோட்டோரத்துக்கு கொண்டு சென்றார். அப்போது ரோட்டில் இருந்த குழியில் சக்கரம் இறங்கியது. மேலும் அதிகாலை அந்த பகுதியில் பெய்த சாரல் மழை காரணமாக, வேனின் சக்கரம் வழுக்கி, வாகனம் ரோட்டோர வயலில் கவிழ்ந்தது.

பள்ளி வேன் கவிழ்ந்தபோது உள்ளுக்குள் இருந்த 2 மாணவிகளும் அலறினார்கள். ஆனால் நல்ல வேளையாக, அவர்கள் இருவரும் இந்த விபத்தில் காயமின்றி உயிர் தப்பினார்கள். டிரைவர் சண்முகத்துக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மாணவிகளையும், சண்முகத்தையும் வாகனத்தில் இருந்து மீட்டு, ரோட்டுக்கு அழைத்து வந்தார்கள். இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் சிக்கிய பள்ளி வாகனத்தில், இரண்டு மாணவியர் மட்டுமே இருந்துள்ளனர். அதிக எண்ணிக்கையில், வாகனத்தில் பள்ளி குழந்தைகள் இருந்திருந்தால், அசம்பாவிதங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், அதிர்ஷ்டவசமாக விபத்து வேளையில், வாகனத்தில் சொற்ப எண்ணிக்கையில் இருவர் மட்டுமே இருந்ததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

வாகனங்களில் மித வேகம் நன்று

ஈரோடு உட்பட தமிழகத்தின் பல இடங்களில் தொடர்மழை பெய்து வருகிறது. இதனால், ரோடுகள் பலவும் மழைநீர் தேங்கிய பகுதிகளாக காட்சியளிக்கிறது. மேலும், தமிழகத்தின் பல இடங்களில் இன்னும் சில தினங்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், பள்ளியில் படிக்கும் குழந்தைகளை அழைத்து செல்லும் பள்ளி வாகனங்கள், முறையாக இயக்கப்பட வேண்டும். மிதமான வேகத்தை பின்பற்ற வேண்டும். மழை நேரங்களில், பள்ளி வாகனங்களை கூடுமானவரை இயக்குவதை தவிர்க்க வேண்டும். அப்படியே இயக்கும் வேளைகளில், மழை பெய்யும் பட்சத்தில், மிதமான வேகத்தில் வாகனங்களை இயக்க வேண்டும். பள்ளி வாகனங்களை அவ்வப்போது ஆய்வு செய்து, பழுதுகள் இருப்பின், உடனுக்குடன் சரிசெய்து கொள்ள, பள்ளி நிர்வாகங்கள் முன்வர வேண்டும். அத்துடன், பள்ளி வாகனங்களை இயக்க, அனுபவம் மிக்க டிரைவர்களை நியமிப்பதும் மிக முக்கியம்.

Updated On: 30 Nov 2022 8:37 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...