கொரோனா விதிமீறல் : ஒரே நாளில் ரூ.93 லட்சம் அபராதம் விதிப்பு

ஈரோட்டில் ஒரே நாளில் கொரோனா விதி மீறியவர்களிடமிருந்து ரூ.93 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கொரோனா விதிமீறல் : ஒரே நாளில் ரூ.93 லட்சம் அபராதம் விதிப்பு
X

தமிழகத்தில் கொரோனா 2 -வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த வரும் ஜூலை 31-ந் தேதி வரை தேதி வரை தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அனைத்து வகையான போக்குவரத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் வாகன எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் விதிமுறைகளை மதிக்காமல் மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.

அதன்படி நேற்று ஒரே நாளில் முக கவசம் அணியாமல் வந்த 357 பேருக்கு தலா ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதைப்போல் சமூக இடைவெளியை பின்பற்றாத 20 பேருக்கு தலா ரூ .500 அபராதம் விதிக்கப்பட்டது. வாகன விதிமுறைகளை முறையாக பின்பற்றாத 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 24 மோட்டார் சைக்கிள்களும், கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்று ஒரே நாளில் விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.93 லட்சம் அபராதம் விதித்து வசூல் செய்யப்பட்டதாக போலீசார் அறிவித்தனர்.

Updated On: 18 July 2021 9:30 AM GMT

Related News

Latest News

 1. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 2. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை: பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு
 3. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவர் சேர்க்கை
 4. ஈரோடு
  சித்தோடு அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது
 5. நாமக்கல்
  கோரிக்கை மனுக்களை மாலையாக அணிந்து வந்த பெண்: கலெக்டர் அலுவலகத்தில்...
 6. நாமக்கல்
  அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரி நாமக்கல் மாவட்ட காங்கிரசார்...
 7. திருவண்ணாமலை
  மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்: 627 மனுக்கள், பெற்றுக்கொண்ட மாவட்ட...
 8. நாமக்கல்
  வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள்:...
 9. நாமக்கல்
  பள்ளிக்கல்வித்துறை மூலம் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை...
 10. நாமக்கல்
  நாமக்கல்லில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்