/* */

ஈரோட்டில் இதுவரை 28 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 28 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈரோட்டில் இதுவரை 28 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு
X

பைல் படம்.

கொரோனா தாக்கம் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் தமிழகத்தில் தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கியதால் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல், பிளஸ்- 2 வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகள் உடன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி என 395 பள்ளிகளை சேர்ந்த ஒரு லட்சத்து 900 மாணவ-மாணவிகள் 9-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளில் சுழற்சி முறையில் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் முதல் முதலாக கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி புஞ்சைபுளியம்பட்டி கே.வி.கே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த மாணவனுடன் படித்த மற்ற மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து மறுநாள் கோபி பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவ்வாறாக தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் மாணவ-மாணவிகள் அவர்களுடன் தொடர்பு இருந்தவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைப்போல் ஒரு சில ஆசிரியர்களுக்கும், பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தொற்று ஏற்பட்டது. இவ்வாறாக ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 28 மாணவ -மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைப்போல் 16 ஆசிரியர்கள், பணியாளர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒரு சில பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில் 28 மாணவ-மாணவிகளில் 8 பேர் குணமடைந்துள்ளனர். மீதமுள்ளவர்கள் வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 23 Sep 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  2. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  3. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  5. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  7. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  8. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  9. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  10. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!