Begin typing your search above and press return to search.
கோபி வேளாண் கூட்டுறவு சங்கத்தில் ரூ.8 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை
கோபி வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாழைத்தார் ரூ.8 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.
HIGHLIGHTS

பைல் படம்.
இந்த ஏலத்தில் கதலி (கிலோ) ரூ.22-க்கும், நேந்திரன் ரூ.16-க்கும் ஏலம் போனது. இதேபோல் பூவன் ஒரு (தார்) ரூ.460-க்கும், தேன் வாழை ரூ.510க்கும்,செவ்வாழை ரூ.580-க்கும், ரொபஸ்டா ரூ.240-க்கும், ரஸ்தாளி ரூ.470 க்கும்,மொந்தன் ரூ.300 க்கும், பச்சை நாடன் ரூ.330-க்கும் ஏலம் போனது.
மொத்தம் 8 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனையானது. இதேபோல் 9 ஆயிரத்து 900தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் ஒரு தேங்காய் 9 ரூபாய் முதல் 20 ரூபாய் 50 காசு வரை விலை போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்துக்கு விற்பனையானது.