ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் முகக்கவசம் அணியாத 458 பேருக்கு அபராதம் விதிப்பு

ஈரோடு மாவட்டத்தில், ஒரேநாளில் முகக்கவசம் அணியாத 458 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் முகக்கவசம் அணியாத 458 பேருக்கு அபராதம் விதிப்பு
X

ஈரோட்டில், வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, ஜூலை 5-ந் தேதி வரை தேதி வரை, தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும், இதை பொருட்படுத்தாமல் வழக்கம்போல் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் ஏராளமானோர் சுற்றி திரிகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில், 36 -வது நாளான நேற்றும், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று மட்டும் முகக்கவசம் அணியாமல் வந்த 458 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடிக்காத 37 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தலா ரூ.500 அபராதம் விதிக்கபட்டது.

ஊரடங்கு தடையை மீறி சுற்றியதாக 197 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 188 இருசக்கரவாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று மட்டும் ரூ.1 லட்சத்து 98 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

நேற்று முதல் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதால், ஈரோடு மாவட்டத்தில் உள்ள சோதனைச்சாவடிகள் அனைத்திலும் வழக்கத்தைவிட வாகன எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இ -பாஸ் பதிவு பெற்று முறையாக அந்த வாகனங்கள் மட்டுமே ஈரோடு மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டன. எனினும், ஈரோடு மாவட்டம் முழுவதும் முக்கியமான சாலைகளில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

Updated On: 30 Jun 2021 12:00 PM GMT

Related News

Latest News

 1. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 2. இந்தியா
  யோகி ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது
 3. இந்தியா
  FASTAG ஸ்கேனிங் மூலம் பணம் திருடுவதாக வீடியோ வைரல்: உண்மை என்ன?
 4. மாதவரம்
  செங்குன்றம் அருகே தூய்மை பணிகள் குறித்த விழிப்புணர்வு முகாம்
 5. கும்மிடிப்பூண்டி
  கும்மிடிப்பூண்டியில் விலையில்லா ஆடுகள்: பயனாளிகளுக்கு எம்.எல்,ஏ...
 6. நாமக்கல்
  பள்ளி, கல்லூரிகளுக்கு இலவசமாக வழங்க தயார் நிலையில் மரக்கன்றுகள்
 7. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
 8. லைஃப்ஸ்டைல்
  Murungai Keerai Soup Benefits in Tamil முருங்கை கீரை சூப் பயன்கள்...
 9. லைஃப்ஸ்டைல்
  Vetrilai Benefits in Tamil வெற்றிலையின் நன்மைகள் தமிழில்
 10. சினிமா
  காதலர் தினத்தில் புதுப்பொலிவுடன் திரைக்கு வரப்போகும் 'டைட்டானிக்'..!