/* */

2018 ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன் நடவடிக்கை

2018 ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதலமைச்சரிடம் கலந்துபேசி ஓரிரு நாளில் பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறியதை தொடர்ந்து ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைந்தார்.

HIGHLIGHTS

கடந்த 2018 ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வெழுதியவர்களில் 857 பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் மூன்று இடங்களில் 41 பேர் கணிணி பழுது காரணமாக செல்போன் மூலமாக அந்த தேர்வு அறையில் இருந்தவர்கள் தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. இதனால் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் இதுகுறித்து வழக்கு தொடர்ந்தனர். வழக்கு காரணமாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் குறிப்பிட்ட தேர்வு அறையில் இருந்தவர்களுக்கு மறு தேர்வு வைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்குவதில் தடை இல்லை என்று கூறியது. அதைத்தொடர்ந்து தேர்ச்சி பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த வாரம் கோபியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை சந்தித்து மனு அளித்தனர். அப்போது முதலமைச்சரிடம் கலந்து ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறினார். அதைத்தொடர்ந்து இன்று 50 க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கோபியில் மீண்டும் அமைச்சரை சந்தித்தனர். அப்போது முதலமைச்சரிடம் கலந்துபேசி ஓரிரு நாளில் பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறியதை தொடர்ந்து ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.

Updated On: 19 Dec 2020 8:19 AM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  2. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  3. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  5. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  6. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  7. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  10. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்