/* */

டிஆர்பி தேர்வை 45 வயதை கடந்தவர்கள் எழுத வாய்ப்பு ?

டிஆர்பி தேர்வை 45 வயதை கடந்தவர்கள் எழுத வாய்ப்பு ?
X

டிஆர்பி தேர்வில் 45 வயதிற்கு மேல் எழுத முடியாமல் போனவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசிலீக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அம்மா மினி கிளினிக்கை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பொதுத்தேர்வு அறிவிப்பு தமிழக முதல்வர் ஒப்புதல் பெற்று விரைவில் வெளியிடப்படும்.பள்ளிகளில் முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமை விடுமுறை அளிப்பது குறித்த கேள்விக்கு தற்போது இதற்கு பதில் அளிப்பது சரியாக இருக்காது என்றார்.

6,7,8 வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பு குறித்து மருத்துவதுறை, கல்வியாளர்கள், பெற்றோர்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து மறு பரிசீலனை செய்யப்படும். ஆசிரியர் தேர்வாணையம் அறிவித்துள்ள டிஆர்பி தேர்வில் கொரோனா காலத்தில் 45 வயதிற்கு மேல் எழுத முடியாமல் போனவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வந்துள்ளதாகவும் அது குறித்து துறை அதிகாரிகள் பரிசீலத்து வருவதாகவும் தெரிவித்தார்.

டெட் தேர்வில் 2013,14,17 ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 82ஆயிரத்திற்கும் மேல் என்றும் அதில் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் இந்த சமநிலையை கருத்தில் கொண்டு எந்தெந்த இடங்களில் பணிகள் காலியாக இருக்கிறதோ அதற்கேற்ப பணிகள் நிரப்பப்படும் என்றார்.

Updated On: 16 Feb 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?