காதலர்தினத்தை எதிர்த்து இந்துமுன்னணி போராட்டம்

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
காதலர்தினத்தை எதிர்த்து இந்துமுன்னணி போராட்டம்
X

தேனியில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் நூதன போராட்டம் நடத்தினர்.

இந்தியாவில் காதலர் தினத்திற்கு இந்து முன்னணி அமைப்பினர் ஒவ்வொரு ஆண்டும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் நாளை கொண்டாடப்பட உள்ள காதலர் தினத்தை கொண்டாடக்கூடாது என்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி நான்கு வழிச்சாலை சந்திப்பில் இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயலாளர் முருகேசன் மற்றும் துணைத்தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் தலைமையில் நாய்க்கும் வெள்ளாட்டிற்கும் திருமணம் நடத்தி வைத்து நூதனமுறையில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். அதன் பின்னர் நாயையும் ஆட்டையும் அவிழ்த்து விட்டு விரட்டினர். இதனால் காதலர்கள் செய்யும் திருமணமும் இவ்வாறு தான் பாதியில் ஓடிவிடும் என்று வலியுறுத்தினர்.

Updated On: 13 Feb 2021 7:22 AM GMT

Related News