/* */

ஈரோட்டில் இலவச அழகுக்கலை பயிற்சிக்கு பெண்கள் விண்ணப்பிக்க அழைப்பு

ஈரோட்டில் கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் இலவச அழகுக்கலை பயிற்சியில் சேர பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈரோட்டில் இலவச அழகுக்கலை பயிற்சிக்கு பெண்கள் விண்ணப்பிக்க அழைப்பு
X

கனரா வங்கி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை.

ஈரோட்டில் பெண்களுக்கான அழகுக்கலை பயிற்சி இலவசமாக அளிக்கப்பட உள்ளதாக, கனரா வங்கி பயிற்சி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கனரா வங்கி கிராமப்புற சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், பெண்களுக்கான அழகுக்கலை பயிற்சி, வரும் டிசம்பர் 8 முதல், அடுத்த ஆண்டு ஜனவரி 11 வரை 30 நாட்களுக்கு இலவசமாக அளிக்கப்பட உள்ளது. இதில், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள முதலில் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதற்கான முன்பதிவு தற்போது நடக்கிறது. ஈரோடு மாவட்ட கிராமப்புற வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், இப்பயிற்சியில் இணையலாம். அதுசமயம், கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக்குலேசன் பள்ளி தளம்-2, கரூர் பைபாஸ் ரோடு, கொல்லம்பாளையம் , ஈரோடு - 638002 என்ற முகவரியில் நேரில் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரர், குறைந்த பட்சம், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டும், 45 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். 100 நாட்கள் வேலை திட்ட பணியாளர்கள், அவர்களது குடும்பத்தாரும் பயிற்சியில் சேரலாம்.பயிற்சிக்கான செலவு, சான்றிதழ், பயிற்சி பொருட்கள், தேநீர், சிற்றுண்டி, உணவு என அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியானது காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு, 0424-2400338 என்ற தொலைபேசி எண்ணிலும், 8778323213, 7200650604 என்ற மொபைல் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

அழகுக்கலை பயிற்சி குறித்த கூடுதல் தகவல்கள்:-

அழகுக்கலை தான் பெண்களுக்கான நம்பிக்கையான எதிர்காலத்தை தரவல்லது என்று கூறினால் அது மிகையில்லை. அந்த அளவிற்கு எல்கேஜி படிக்கும் பிள்ளைகள் முதல் சஷ்டியப்த பூர்த்தி செய்யும் தம்பதிகள் வரைக்கும் அழகுக்கலையின் தேவை நிறைந்து கிடக்கிறது. அரசின் அங்கீகாரத்துடன் நடத்தப்படும் ஒரு இலவச அழகுக்கலை பயிற்சி (free beautician course) முகாமில் கலந்து கொள்ள பெண்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் அணைத்து அழகுக்கலை பயிற்சிகளும் முழுக்க முழுக்க இலவசம். பயிற்சி முடித்த உடன் அரசு சான்றிதழும் வழங்கப்படுகிறது.

ஒரு நாள் பயிற்சி வகுப்பு என்று அலட்சியமாக எண்ணி விட வேண்டாம். 30 நாட்கள் அழகுக்கலை வகுப்புகள் நடைபெறுகின்றன. அழகுக்கலை குறித்த தியரி பாடங்கள் மற்றும் செயல்முறைப் பாடங்கள் இரண்டுமே நடத்தப்படுகிறது. முப்பது நாட்களின் முடிவில் கலந்து கொண்டவர்களுக்கு அரசு சான்றிதழ் தரப்படுகிறது. முழுக்க முழுக்க இந்த அழகுக்கலை பயிற்சிகள் அனைத்தும் இலவசமாக கற்றுத்தரப்படுகிறது.

இதே அழகுக்கலை பயிற்சியை நீங்கள் வெளியில் சென்று படிக்க நேர்ந்தால் 12000 முதல் 15000 வரை செலவாகலாம். இதற்கான இலவச ஸ்டடி மெடீரியல் வழங்கப்படுகிறது. தொழில் முறைப்பயிற்சியாளர் மூலம் நேரடிப் பயிற்சியும் செயல்முறை பயிற்சியும் கற்றுத்தரப்படுகிறது. இலவச அழகுக்கலை பயிற்சியை பயின்று முடித்த உடன் வேலைவாய்ப்புக்கான வழிவகைகளை செய்து தரப்படும். சொந்தமாக தொழில் தொடங்கவும் ஆலோசனைகள் தரப்படும். வழிகாட்ட உதவியாளர்களும் உண்டு.

Updated On: 5 Dec 2022 2:00 PM GMT

Related News