/* */

ஈரோடு மக்களை மகிழ்விக்க மீண்டும் வருகிறது "ஃபன் ஸ்ட்ரீட்" நிகழ்ச்சி

ஈரோடு மக்களை மகிழ்ச்சியூட்டும் வகையில், 'ஃபன் ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி 2வது முறையாக மீண்டும் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மக்களை மகிழ்விக்க மீண்டும் வருகிறது ஃபன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சி
X

ஈரோட்டில் கடந்த முறை நடைபெற்ற 'ஃபன் ஸ்ட்ரீட்' நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படம்.

ஈரோடு மக்களை மகிழ்ச்சியூட்டும் வகையில், 'ஃபன் ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி 2வது முறையாக மீண்டும் நடைபெற உள்ளது.

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையை பொதுமக்கள் பயனுள்ளதாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் சென்னை, கோவை பெரு மாநகரங்களில் ஹேப்பி ஸ்ட்ரீட் (மகிழ்ச்சி தெரு) என்ற கொண்டாட்ட நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஈரோட்டில் ஜேசிஐ ஈரோடு மற்றும் மாவட்ட போலீசார் சார்பில் 'ஃபன் ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி கடந்த ஜூலை மாதம் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெரியார் நகரில் உள்ள 80 அடி சாலையில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஆடல், பாடல் என களைகட்டிய நிகழ்ச்சியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியானது, ஈரோடு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், 2வது முறையாக வரும் செப்டம்பர் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, ஈரோடு சோலார் பேருந்து நிலையத்தில் காலை 6 மணி முதல் 10 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

பாடல், நடனம் உள்ளிட்டவற்றுடன் உற்சாகம் கரைபுரளும் இந்த நிகழ்ச்சியில், சைக்கிள் மற்றும் மோட்டார் வாகன நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கிறது. ஒரு மாதங்களுக்கு பிறகு ஃபன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற இருப்பது ஈரோடு மக்களிடையே மிகவும் மகிழ்ச்சிகரமானதாக அமைந்துள்ளது.

Updated On: 3 Sep 2023 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  2. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  3. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  4. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  6. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  7. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  8. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி
  9. லைஃப்ஸ்டைல்
    நான் வணங்கும் அன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. தேனி
    தேனியில் அன்னையர் தின மாவட்ட செஸ் போட்டிகள்