சவர்மா உயிரிழப்பு எதிரொலி: ஈரோட்டில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு

சவர்மா சாப்பிட்ட நாமக்கல் சிறுமி உயிரிழந்ததை அடுத்து ஈரோட்டில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை நடத்தினர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சவர்மா உயிரிழப்பு எதிரொலி: ஈரோட்டில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு
X

ஈரோடு - பெருந்துறை சாலையில் உள்ள ஓட்டலில் காலாவதியான இறைச்சிகளை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள்.

சவர்மா சாப்பிட்ட நாமக்கல் சிறுமி உயிரிழந்ததை அடுத்து ஈரோட்டில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (நேற்று) அதிரடி சோதனை நடத்தினர்.

கேரளாவில் கடந்தாண்டு ஷவர்மா சாப்பிட்ட, 16 வயது சிறுமி உயிரிழந்தார். தற்போது, 14 வயது நாமக்கல் சிறுமி உயிரிழந்துள்ளார். இறைச்சியை பொறுத்தவரையில், அவற்றை முறையாக பதப்படுத்தாவிட்டாலும், வேக வைக்காவிட்டாலும், 'ஷிகெல்லா, ஸ்டபைலோ காக்கஸ் ஆரியஸ், லிஸ்டீரியா மோனோசைப்டோஜீனஸ்' உள்ளிட்ட பாக்டீரியா உருவாகி விடுகிறது. முறையாக வேக வைக்காமல் சாப்பிடும் போது உயிர்கொல்லியாக மாறி விடுவதால், இதுபோன்ற சம்பவங்கள் ஏற்பட்டு வருகின்றன.

மேலும், தமிழகத்தில் மாதிரிகளை பரிசோதிக்க போதிய அளவில், பகுப்பாய்வுக் கூடங்கள் இல்லை. ஒரு மாதிரியை சேகரிக்க அனுப்பினால், 10 முதல் 15 நாட்கள் வரை ஆகிறது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால், உணவின் தரத்தை உறுதி செய்வதில், அதிகாரிகளுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மாநிலம் முழுதும் இறைச்சி கடைகள் மற்றும் அசைவ உணவகங்களில் சோதனை செய்யவும், அவர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கவும், மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு, தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.


அதன்படி, ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர்.தங்க விக்னேஷ் தலைமையில் அலுவலர்கள் செல்வன், அருண்குமார் தலைமையில் குழுவினர் ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 12 கிலோ காலாவதியான சிக்கன் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த 12 கிலோ சிக்கனை உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் பினாயில் ஊற்றி அழித்தனர். இதுபோல, மாநகர் பகுதியில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர்.தங்க விக்னேஷ் தெரிவிக்கையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அசைவ ஓட்டல்களில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. ஈரோடு மாநகராட்சியில் 15 ஓட்டல்களும், சத்தியமங்கலம் நகராட்சியில் 8 ஓட்டல்களும், பெருந்துறை பேரூராட்சியில் 15 ஓட்டல்களும் என மொத்தம் 38 ஓட்டல்களில் ஆய்வு நடந்தது. இதில் ஈரோடு மாநகராட்சி பகுதியில் 27 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு, 3 ஓட்டல்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், 3 ஓட்டல்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பெருந்துறை பேரூராட்சியில் 35 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு ஓட்டலுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, 3 ஓட்டல்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சத்தியமங்கலத்தில் 4 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. அங்கு 2 ஓட்டல்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு, 2 ஓட்டல்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. எனவே மொத்தம் 6 ஓட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அங்கு முறையாக சுத்தம் செய்யப்பட்டு, அதிகாரிகள் சரிபார்த்த பிறகு மீண்டும் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது, என்றார்.

Updated On: 20 Sep 2023 1:30 AM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  திருப்பதியில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு வயது சிறுவன் கடத்தல், தேடுதல்...
 2. தென்காசி
  தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
 3. அம்பாசமுத்திரம்
  நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
 4. திருவில்லிபுத்தூர்
  கிராமசபை கூட்டத்தில் விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சிசெயலாளர்
 5. இந்தியா
  ஜம்மு காஷ்மீரின் கலகோட் பகுதியில் தீவிர பயங்கரவாத எதிர்ப்பு...
 6. பொன்னேரி
  அரிமா சங்கம் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம்
 7. பாளையங்கோட்டை
  நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 8. திருவள்ளூர்
  கர்நாடக அரசை கண்டித்து ஒரக்காடு கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு...
 9. சினிமா
  விக்ரம், சூர்யா பட பிரபலம் மரணம்...திரையுலகம் அஞ்சலி..!
 10. தென்காசி
  தென்காசி உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்